Sundar.C Net Worth: மதகஜராஜா சுந்தர்.சியின் பிறந்தநாள்.. யப்பா இவ்வளவு சொத்தா?.. செம கெத்துதான்
சென்னை: தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக சக்சஸ்ஃபுல் இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவரது படம் என்றாலே கண்டிப்பாக சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் தனது முதல் படத்திலிருந்து உழைத்துவருகிறார். சமீபத்தில்கூட அவரது இயக்கத்தில் மதகஜராஜா திரைப்படம் வெளியானது. அந்தப் படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் மணிவண்ணன். அவரிடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கியவர் சுந்தர்.சி. மணிவண்ணனிடம் வித்தைகளை கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை கடந்த 1995ஆம் ஆண்டு இயக்கி இயக்குநராக அறிமுகமானார் சுந்தர். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தில் காமெடி காட்சிகள் எல்லாம் இப்போது பார்த்தாலும் சிரித்து வயிறு வலிக்கும்.

கவனம் பெற்ற இயக்குநர்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர்.சியை தயாரிப்பாளர்கள் மொய்க்க தொடங்கினார்கள். அதன்படி முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவற்றில் முறை மாப்பிள்ளை மட்டும்தான் சரியாக போகவில்லை. மற்ற எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஜினியின் கரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் அருணாச்சலமும் ஒன்று.
காமெடி கிங்: சுந்தர்.சியை பொறுத்தவரை தனது படங்களுக்கு வருபவர்கள் அனைத்து கவலைகளையும் மறந்து சிரித்துவிட்டு செல்ல வேண்டுமென்பதுதான் ஃபார்முலா. அந்த ஃபார்முலாவை இன்றுவரை விடாமல் பிடித்து வைத்திருக்கிறார். அதில் சக்சஸும் ஆகிவருகிறார். அதேசமயம் அவரால் அன்பே சிவம் போன்ற படத்தையும் இயக்க முடியும். ஆனால் அந்தப் படத்தை பெரிதாக அப்போது யாரும் கொண்டாடவில்லை. அதனை நினைத்து இன்றுவரை அவர் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுந்தர்.சி: இயக்குநராக இருந்த சுந்தர்.சி திடீரென்று நடிகராக மாறினார். அப்படி அவர் நடித்த தலைநகரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த சுராஜ்தான் இயக்கியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து அவர் நடித்தாலும் பெரிய வெற்றி ஒன்றும் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க மீண்டும் அவர் நகரம் மறுபக்கம் படத்தின் மூலம் இயக்குநரானார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக அவர் இயக்கிய கலகலப்பு படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து அவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை சீரிஸ் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
திருமணம்: இதற்கிடையே தனது முதல் படத்தை இயக்கியபோதே குஷ்பூவை காதலித்த சுந்தர்.சி அவரை திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க சுந்தர் தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் 12 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி மெகா ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் அவர் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சொத்து மதிப்பு: அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவரிடம் மொத்தம் 50 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருப்பதாகவும்; குஷ்பூ சம்பாதித்ததும் சுந்தர்.சியையே சேரும் என்பதால் மொத்தம் 120 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இயக்குநராக ஒரு படத்துக்கு 6 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கும் அவருக்கு கோயம்புத்தூரிலும், சென்னையிலும் சொகுசு பங்களா இருக்கிறது. அதேபோல் Audi, BMW போன்ற சொகுசு கார்களையும் சுந்தர்.சி வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











