குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை.. சந்தோஷத்தில் ஜாய் கிரிஸில்டா.. என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் நடந்த சில காலத்திலேயே கிரிஸில்டாவிடமிருந்து ஒதுங்கும் செயல்களில் மாதம்பட்டியார் இறங்க; கடுப்பான ஜாய் கிரிஸில்டா பொதுவெளியில் இறங்கிவிட்டார். நீதிமன்றத்துக்கு சென்ற இந்த விவகாரத்தில்; டிஎன்ஏ பரிசோதனையும் ரங்கராஜுக்கு செய்யப்பட்டது. அதில் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் பயங்கரமாக என்ஜாய் செய்துகொண்டிருக்கிறார் ஜாய்.

தமிழ்நாட்டில் பிரபலமான சமையல் கலைஞராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் மெஹந்தி சர்க்கஸ் படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தந்தை ஆன அவருக்கு; பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள்.

Madhampatti Rangaraj DNA Test Confirms Fatherhood Joy Crizildaa s Emotional Post Goes Viral
Photo Credit:

புகார் அளித்த ஜாய்: திருமணம் நடந்தபோதே ஜாய் கர்ப்பமாக இருந்தார் என கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவரிடமிருந்து ரங்கராஜ் விலக ஆரம்பித்தார். இதனால் கடுப்பாகி பொதுவெளிக்கு வந்து புகாரும் அளித்தார். இதுதொடர்பான விசாரணையும் தொடங்கியது. இவ்விவகாரத்தின் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ரங்கராஜ்; ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் நிரூபித்தால்; அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள தயார் என தெரிவித்திருந்தார்.

டிஎன்ஏ டெஸ்ட்டில் உறுதி: அதனையடுத்து அவருக்கு டிஎன்ஏ டெஸ்ட்டும் நடத்தப்பட்டது. அதன் ரிசல்ட் நேற்று நீதிபதியிடம் வழங்கப்பட்டது. அதில், ஜாய்க்கு பிறந்திருக்கும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதியாகிவிட்டது. அறிவியல் ரீதியாக இது உறுதி செய்யப்பட்டதால் கிரிஸில்டா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அவர் சந்தோஷம் மற்றும் எமோஷனலுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Also Read
கரூர்ல ஆம்புலன்ஸ்.. கொளத்தூர்ல பஸ்.. மக்கள் உயிருடன் விளையாடுறாங்க.. பொதுமக்கள் ஆதங்கம்!
கரூர்ல ஆம்புலன்ஸ்.. கொளத்தூர்ல பஸ்.. மக்கள் உயிருடன் விளையாடுறாங்க.. பொதுமக்கள் ஆதங்கம்!

ஜாய் கிரிஸில்டா பதிவு: அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இந்த விவகாரம் தொடர்பாக, "என் மனம் உணர்ச்சிவசத்தால் நிரம்பி வழிகிறது. எனது மொபைல் தொடர்ந்து ரிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. எனது இன்ஸ்டாகிராம் முழுக்க மெசேஜ்களால் நிரம்பியிருக்கிறது. நீங்கள் அனுப்பிய ஒவ்வொரு வார்த்தையும் என்னை ஆழமாக தொட்டிருக்கிறது. எனக்கு கண்ணீரையும் வரவழைத்தது. இதை உங்கள் சொந்த வெற்றியாக கொண்டாடும் அளவுக்கு இத்தனை பேரை பார்க்கிறேன். உங்கள் அன்பையும், நம்பிக்கையையும், என்னுடன் நின்ற உறுதியையும் எப்போதுமே நான் மறக்கமாட்டேன்.

ஒவ்வொருவருக்கும் சொந்தம்: இன்றைய இந்த வெற்றி என்னை நம்பி என்னுடன் நின்று, நான் தனியாக இருக்கிறேன் என உணராதபடி செய்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. நான் உணர்ச்சிவசத்தில் மெய் மறந்து இருக்கிறேன். நான் எப்போதுமே நன்றியுள்ளவள். தொலைவில் இருந்தாலும் என்னை தாங்கியவர்களுக்கு நன்றி. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவுக்கு கீழ் மேற்கொண்டு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X