இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. முதல் மனைவியிடம் டைவர்ஸ் வாங்கினாரா?

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிரபல சமையல் கலைஞராகவும்; பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது டீமுடன் சமையல் செய்துகொடுப்பவராகவும் திகழ்பவர். அதுமட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான இவர் இப்போது ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரதமர் முதல் தமிழ் சினிமா செலிபிரிட்டிகள்வரை பலருக்கும், அவர்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் சமையல் செய்துகொடுத்திருக்கிறார். இவரது சமையலுக்கு என்று டிமாண்ட் எப்போதுமே இருப்பதுண்டு. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தான் எடுக்கும் ஆர்டர்களில் நேர்த்தியாக சமையல் செய்து நல்ல பெயரை சம்பாதித்துவருகிறார்.

ஹீரோவாக அறிமுகமான ரங்கராஜ்: நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார் ரங்கராஜ். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக ரங்கராஜின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அதற்கு பிறகு பெரிதாக எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

Madhampatti Rangaraj Got Second Marriage Here are Details
Photo Credit:

குக் வித் கோமாளி நடுவர்: வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கியே இருந்தாலும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியிலிருந்து சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக ரங்கராஜ் அந்த நிகழ்ச்சியில் நடுவராக களமிறக்கப்பட்டார். தன்னால் முடிந்த அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்.

திருமணமான ரங்கராஜ்: இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவரது மனைவி பெயர் ஸ்ருதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த ரங்கராஜின் திருமண வாழ்க்கையில் கடந்த சில காலமாகவே புயல் அடித்தது. அதுமட்டுமின்றி, அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. கிரிஸில்டாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடினேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி அவர் தனக்கு பூ வாங்கித்தந்ததாக கூறிய ஜாய், தனது பெயரை 'ஜாய் ரங்கராஜ்' என்றும் எழுதிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இரண்டாவது திருமணம்: ஜாய் தொடர்ந்து இப்படியான போஸ்ட்டுகளை போட்டு வந்ததால் அவரும், ரங்கராஜும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என கூறப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்கள். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள். கோயிலில் வைத்து இரண்டு பேரும் சிம்ப்பிளாக தங்களது திருமணத்தை முடித்திருக்கிறார்கள். அதில் தங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே கலந்துகொள்ள அந்த ஜோடி அழைப்பு விடுத்திருந்தது.

முதல் திருமணத்திலிருந்து வெளியே வந்த ரங்கராஜ் இந்தத் திருமண வாழ்க்கையையாவது முழுமையாகவும், ஒழுங்காகவும் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் இவரது முதல் மனைவியான ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னமும் ஸ்ருதி ரங்கராஜ் என்ற பெயருடன்தான் ஐடியை வைத்திருக்கிறார். மேலும் அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் டெலிட் செய்யாமல் வைத்திருக்கிறார். குறிப்பாக இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக இன்னமும் விவாகரத்து பெறவில்லை என்றே தெரிகிறது. எனவே ரங்கராஜின் இரண்டாவது திருமணம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X