மாதம்பட்டி ரங்கராஜ் பிரிந்துவிட்டாரா?.. அவரது மனைவி என்ன சொல்றாரு பாருங்க.. பிரச்னை பெருசாகுதே

சென்னை: மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்துவருவதாகவும்; விரைவில் ஸ்ருதியை பிரியவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் அவரது மனைவி ஸ்ருதி போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள்வரை அறியப்பட்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் அவர் பலருக்கு சமைத்து போட்டிருக்கிறார். தங்களது வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் கூப்பிடுங்கள் மாதம்பட்டி ரங்கராஜை என்றுதான் சினிமா பிரபலங்கள் கூறுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக மட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அடையாளப்பட்டிருக்கிறார் அவர்.

Madhampatti Rangaraj Shruthi Cook With Comali

நல்ல நடிப்பு: குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் வணிக ரீதியாக கொண்டாடப்படவில்லையென்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதுமட்டுமின்றி ரங்கராஜின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தார்கள். கண்டிப்பாக தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால்; அதற்கு பிறகு அவரை ஹீரோவாக பார்க்கவே முடியவில்லை.

குக் வித் கோமாளி: பெரிய திரையில் அவர் இல்லாவிட்டாலும் சின்னத்திரையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ரங்கராஜை பலரும் ரசித்துவருகிறார்கள். நடுவராக மட்டுமின்றி போட்டியாளர்களிடம் ஈகோ இல்லாமல் பழகுவது; டைமிங் கவுன்ட்டர்கள் அடிப்பது என்று ரகளையாக அந்த நிகழ்ச்சியை நகர்த்தி செல்கிறார் மாதம்பட்டியார். இதன் காரணமாக அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் பெருக ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் டூ காதல்?: இதற்கிடையே அவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை ரங்கராஜ் காதலித்துவருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கின்றன. ஜாயும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரங்கராஜ் பற்றியே தொடர்ந்து போஸ்ட்டுகளை போட்டுவருகிறார். ஆனால் இதுகுறித்து ரங்கராஜோ அவரது மனைவி ஸ்ருதியோ ரியாக்ட் செய்யாமல் இருந்தார்கள்.

ஸ்ருதியின் போஸ்ட்: இந்நிலையில் ரங்கராஜின் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் சில போஸ்ட்டுகளை போட்டிருக்கிறார். அதாவது சில வாரங்களுக்கு முன்பு ரங்கராஜுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர்; இன்னொரு போஸ்ட்டில் 'ஆம் நான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவிதான்' என்று கமெண்ட்டும் செய்திருக்கிறார். அதேபோல் ஒரு குடும்ப விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும்; கோடி அருவி கொட்டுதே உன் மேல என்ற பாடலை ஒரு கல்லூரியில் மாணவர்கள் பாடிய வீடியோவை ரங்கராஜை Tag செய்து பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் ரங்கராஜும், தானும் இன்னமும் அன்யோன்யமாகத்தான் இருக்கிறோம் என்பதை மறைமுகமாக அவர் உணர்த்தியிருக்கிறார் என நெட்டிசன்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X