கல்யாணத்துக்கு முன்பே மனைவி கர்ப்பம்.. மாதம்பட்டி ரங்கராஜ் அவசரமாக 2வது திருமணம் செய்ய காரணம் இதுவா?
சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். முதல் மனைவியான ஸ்ருதியுடன் அவர் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் ஜாய் தனது இன்ஸ்டா பயோவில் வைத்திருக்கும் விஷயம் மேற்கொண்டு இந்த விஷயத்தி பரபரப்பை கூட்டியிருக்கிறது.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. செலிபிரிட்டிகள், தொழிலதிபர்கள் என பலரது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்துகொடுக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார். பலரும் ரங்கராஜின் சமையலை விரும்பிவருகிறார்கள். இதனால் அவர் குறுகிய காலத்திலேயே மாநிலம் முழுவதும் படு ஃபேமஸ் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ ரங்கராஜ்: இப்படிப்பட்ட நிலைமையில் அவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சரவணன் இயக்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும்; விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. முக்கியமாக ரங்கராஜின் நடிப்புக்கும் தீனி போடும்படியாக அந்தப் படம் அமைந்திருந்தது. அப்படத்துக்கு பிறகு வேறு எந்த படத்திலும் ரங்கராஜ் நடிக்கவில்லை. அதேசமயம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

திருமண வாழ்க்கை: இதற்கிடையே அவர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ருதி அடிப்படையில் ஸ்ருதி ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர்களது வாழ்க்கையில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வர ஆரம்பித்தன.
ரங்கராஜின் பழக்கம்: இந்த மனஸ்தாபங்கள் நாட்கள் செல்ல செல்ல பெரும் விரிசலை உண்டு பண்ணியது. இது ஒருபக்கம் இருக்க மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவுடன் பழகிவந்தார். அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் ஆரம்பத்தில் அதுகுறித்து இரண்டு பேருமே மௌனம் மட்டுமே காத்துவந்தார்கள். அதேசமயம் கண்டிப்பாக இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டது.
இரண்டாவது திருமணம்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அவர்களது திருமணம் கோயிலில் வைத்து ரொம்பவே சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அவர்களது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இதில் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. மேலும் ஸ்ருதியிடமிருந்து இன்னும் சட்டப்பூர்வமான விவாகரத்தை ரங்கராஜ் வாங்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.
திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்: இந்தத் திருமணமே பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கும் நிலையில்; ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா பயோவில் குறிப்பிட்டிருக்கும் விஷயம் மேற்கொண்டு பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது அவர் தனது பயோவில், "மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி; கர்ப்பமாகவும் இருக்கிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, ஓஹோ திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகிவிட்டதால்தான் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார்களா என்ற கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ஸ்ருதி தனது இன்ஸ்டா ஐடியில் ரங்கராஜின் பெயரை நீக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இந்தத் திருமணம் குறித்து ஸ்ருதி என்ன சொல்லப்போகிறார் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











