குக்வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் நடிகையுடன் டேட்டிங்?... யார் அந்த நடிகை தெரியுமா!

சென்னை: சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை பிரிந்து சினிமா பிரபலம் ஒருவருடன் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்த முழு செய்தியை இதில் காணலாம்.

பிரபல குக்கிங் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லும் உணவு வகையை கேட்டால் தலை சுத்தி போகும். விதவிதமாக சுவையான உணவுகளை சமைத்து கொடுத்து சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் இல்லாமல் அரசியல், சினிமா, பிசினஸ் என முக்கிய பிரபலங்களின் வீட்டு விழாக்கள் இல்லை என்பதே நிதர்சனம். அவர் சமையல் என்றால் அந்த விழாவே களைகட்டும். பார்த்து பார்த்து பிரபலங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறி வருகிறார்.

Madhampatty Rangaraj 2nd Married Joycrizildaa

குக் வித் கோமாளியில் நடுவர்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். இந்நிகழ்ச்சியில் முக்கிய நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென விலகினார். பின்னர், அவர் இடத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்தார். ஏற்கனவே பிரபலமாக இருந்தாலும், இந்நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றார். அவர் சொல்லும் சமையல் முறைகளும் சக போட்டியாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா பிரபலத்துடன் நெருங்கி பழகி வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றனர்.

மனைவியை பிரிந்தாரா?: மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், அவர் தனது முதல் மனைவியை பிரிந்து விட்டார் என்ற என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. மேலும், காதலர் தினத்தன்று இவர் வைத்த ஸ்டேட்டஸ் தான் புயலை கிளப்பியுள்ளது என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

Madhampatty Rangaraj 2nd Married Joycrizildaa

சினிமா பிரபலத்துடன் டேட்டிங்?: சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராகவுள்ள ஜாய் கிரிஸில்டா என்பருடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளாராம்.கிறிஸ்துமஸ் தினத்தின்போது ஜாய் தன் பெயரை ஜாய் ரங்கராஜ் என கையெழுத்து போட்ட படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. சந்தேக புயலை கிளப்பினாலும், அடுத்தடுத்து வரும் இன்ஸ்டா போஸ்ட்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் உள்ளன.

ஜாய் கிரிஸில்டா அவரது இன்ஸ்டா போஸ்ட்களில் மாதம்பட்டி ரங்கராஜ் மை மேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாகவும் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது.

Madhampatty Rangaraj 2nd Married Joycrizildaa

இரண்டாவது திருமணமா: மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாகவும், விரைவில் ஜாய் கிரிஸில்டாவை 2ஆவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதற்கேற்றார்போல், இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜாய் கிரிஸில்டா போன் வால்பேப்பரில் ஜோடியாக இருக்கும் போட்டோ தான் இருக்கிறது என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து இதற்கு எந்தவித எதிர்ப்புகளையோ மறுப்போ தெரிவிக்காமல் இருப்பது மேலும் சந்தேகத்தை கிளப்புவதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் விரைவில் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X