அனைத்தையும் ஒத்துக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. ஜாய் கிரிஸில்டாவை வாழ்த்திய முதல் நடிகை!.. சூப்பர் வாழ்த்து

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா ஒருவழியாக ப்ரீ க்ளைமேக்ஸை நெருங்கியிருக்கிறது. இரண்டாவது திருமணம் செய்ததை, பிறந்த ஆண் குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ஒத்துக்கொண்டார் மாதம்பட்டி. இதன் காரணமாக பலரும் ஜாய் கிரிஸில்டாவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் நடிகையும், எழுத்தாளருமான கொற்றவையும் தன் வாழ்த்தை கூறியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததிலிருந்து இதுதான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக இருந்தது. தன்னைப் பற்றி ஜாய் கிரிஸில்டா பேசுவதை நிறுத்த வைக்க எடுத்த முயற்சிகளுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டதிலிருந்தே ரங்கராஜுக்கு இந்த விவகாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

விசாரணைக்கு ஆஜர்: கிரிஸில்டாவும் தனது பங்குக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தார். விசாரணைக்குக்கூட ரங்கராஜ் தனது முதல் மனைவியுடன் ஆஜராக; ஜாயோ தனியாக ஆஜரானார். நிறைமாத கர்ப்பிணி அப்படி தனியாக ஒரு விசாரணைக்கு ஆஜரானது பார்ப்பவர்களை அவர் மீது இரக்கப்பட வைத்தது. விசாரணையை முடித்த சில நாட்களிலேயே அவர் மாதா மாதம் 6.50 லட்சம் ரூபாய் தனக்கு பராமரிப்பு செலவுக்காக கொடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்து ரங்கராஜுக்கு அடுத்தக்கட்ட அழுத்தத்தை கொடுத்தார்.

Madhampatty Rangaraj Accepts Second Marriage with Joy Crizildaa Actress Kotravai Praises Her Victory
Photo Credit:

ஆண் குழந்தை பிறந்தது: இப்படி தனக்கு என்னவெல்லாம் வழிகள் இருக்கோ அத்தனை வாயிலாகவும் கிரிஸில்டா போராடிக்கொண்டிருந்தபோது ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்ததால் அடுத்தக்கட்டமாக ரங்கராஜ் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்திருந்தது. ஒருவழியாக கிரிஸில்டாவுடனான இரண்டாவது திருமணத்தையும், பிறந்த குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் ஒத்துக்கொண்டார்.

கிரிஸில்டாவுக்கு வெற்றி: இருப்பினும் அவரை கைது செய்யலாம் காவல் துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததால் அடுத்து இதில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நீண்ட போராட்டம் நடத்தி ஜாய் நீதியை பெற்றுவிட்டார் என்று பலரும் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும், மேற்கொண்டு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாமல் குழந்தையை நல்லபடியாக ரங்கராஜ் வளர்க்க வேண்டும் என்றும் அக்கறையோடு ரசிகர்கள் சொல்ல தொடங்கியுள்ளார்கள்.

நடிகையின் வாழ்த்து: இந்நிலையில் இப்போராட்டத்தில் வெற்றி பெற்ற ஜாய் கிரிஸில்டாவுக்கு நடிகையும், எழுத்தாளருமான கொற்றவை வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது வாழ்த்தில், "விதி படத்தில் வரும் பெண்ணைப் போன்று போராடி நீதி பெற்றுள்ளீர்கள். அவதூறு பேசிய வாய்கள் எல்லாம் இப்போது மிக்சர் சாப்பிடும்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வாழ்த்தை கிரிஸில்டா தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் வைத்திருக்கிறார்.

கிரிஸில்டாவின் பதிவு: முன்னதாக ஜாய் கிரிஸில்டா தனது ஸ்டோரியில், "நான் எனது மகனை தவறாக ஒருபோதும் வளர்க்கமாட்டேன். அவனை ஒரு போராளியாக நான் வளர்த்தெடுப்பேன். மை லிட்டில் சிம்பா உன்னை சுற்றி இருக்கும் பெண்களுக்கு நீ பாதுகாப்பாகவும், அவர்களிடம் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X