டிஎன்ஏ டெஸ்ட் பின் மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்காரு?.. மகனை கவனிக்கிறாரா?.. ஜாய் கிரிஸில்டா ஓபன்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். ஜாய் கிரிஸில்டா ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். ஆனால் ரங்கராஜோ தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறவில்லை. ஜாயை திருமணம் செய்த சில மாதங்களிலேயே அவரை பிரிய நினைத்தார் ரங்கராஜ். அப்போதுதான் இவ்விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்கிறார் என்பது குறித்து ஜாய் கிரிஸில்டா கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிகம் விவாதத்தை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம்தான். இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணமாக இருந்தாலும்; ரங்கராஜ் விவரமாக அவரை பிரிய பார்த்திருக்கிறார். அதனையடுத்துதான் காண்டாகிய ஜாய் கிரிஸில்டா இவ்விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டு வந்தார். அதனால்தான் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. ஆரம்பத்திலிருந்தே பெரும்பாலானோர் ஜாய்க்குதான் இவ்விஷயத்தில் சப்போர்ட்டாக இருந்தார்கள்.

Madhampatty Rangaraj Accepts Son After DNA Test Joy Crizildaa Shares Details
Photo Credit:

ஸ்ருதி ரங்கராஜின் ஆதரவு: அதேசமயம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் முழு ஆதரவை கொடுத்தார். மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது அவருடன் ஸ்ருதியும் வந்திருந்தது அனைவருக்குமே அதிர்ச்சிதான். இப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் ரங்கராஜ் மாதிரியான ஆண்கள் தைரியமாக தவறு செய்கிறார்கள் என்று அவரையும் வறுத்தெடுத்தார்கள். இருப்பினும் அதையெல்லாம் ஸ்ருதி கண்டுகொள்ளவில்லை. இறுதிவரை அவருக்கு சப்போர்ட்டாக இருப்பேன் என்றும் உறுதி கொடுத்தார்.

டி.என்.ஏ டெஸ்ட்: அந்த விசாரணையின்போது டி.என்.ஏ டெஸ்ட்டில் இந்தக் குழந்தை என்னுடையதுதான் என்பதை நிரூபித்தால் காலம் முழுவதும் இந்தப் பிள்ளையை பார்த்துக்கொள்ள தயார் என கூறிவிட்டு வந்தார். அப்படி சொன்னதோடு மட்டும் சரி; அதற்கு பிறகு பல மாதங்கள் அவர் அந்த டெஸ்ட்டுக்கு செல்லவில்லை. ஜாய் கிரிஸில்டாவும் கோபமாக பேசி பார்த்தார். கிண்டலாக பல பதிவுகளை இன்ஸ்டாகிராமில் போட்டார். ம்ம்ஹூம் குளத்தில் போட்ட கல் மாதிரி அப்படியே இருந்தார் ரங்கராஜ்.

Also Read
MR X ட்விட்டர் விமர்சனம்.. படம் பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா?
MR X ட்விட்டர் விமர்சனம்.. படம் பார்த்தவர்கள் எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்றாங்க தெரியுமா?

முடிவுக்கு வந்த பிரச்னை: ஒருவழியாக சமீபத்தில் அந்த டி.என்.ஏ டெஸ்ட்டில் கலந்துகொண்டார் மாதம்பட்டியார். அதில், பிறந்திருக்கும் குழந்தை அவருடையதுதான் என்பது நிரூபனமானது. இதனால் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பதும் முடிவானது. இதனால் ஜாய் நிம்மதியடைந்தார். இத்தனை மாத போராட்டத்துக்கு நீதி கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்துபோனார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

என்ன போஸ்ட்?: அதாவது மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, டி.என்.ஏ டெஸ்ட் முடிவுகளுக்கு பிறகு என்ன நடந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்கிறார் என்று கேட்கிறவர்களுக்கான அப்டேட் இதோ. மாதம்பட்டி ரங்கராஜ் மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொண்டிருக்கிறார். வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன் எனவும் கூறியிருக்கிறார். தனது மகனை விட்டு பிரியமாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். இன்னும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X