டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உறுதி.. மகனுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் செய்த சத்தியம்.. ஜாய் கிரிஸில்டா ஓபன் டாக்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஜாய் கிரிஸில்டாவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் நடந்தது. அது இரண்டு பேருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். ஆனால் ஜாயிடமிருந்து ரங்கராஜ் விலக நினைத்ததால் அந்த விஷயம் பொதுவெளிக்கு வந்தது. அதனையடுத்து டிஎன்ஏ டெஸ்ட்டில் அந்தக் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டியார்தான் என்பது உறுதி செய்யப்பட்டதால் ஜாய் கிரிஸில்டா நிம்மதியடைந்தார். இந்நிலையில் ஜாயின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அவருக்கான லைம் லைட்டும் கொஞ்சம் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தார். அந்து மனுவில், 'ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றுவதாகவும்; தான் கர்ப்பமாக இருக்கிறேன்' என்றும் தெரிவித்திருந்தார்.

சிந்துபாத் போல்: அதனையடுத்து பல வீடியோக்களையும், போஸ்ட்டுகளையும் போட்டு தள்ளினார் கிரிஸில்டா. ரங்கராஜும் அதை தடுப்பதற்கு தன்னால் முடிந்த அத்தனையையும் செய்தார். ஆனால் அவரால் அதை தடுக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் விசாரணைக்கு ஆஜரான அவர்; பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை மரபணு சோதனையில் நிரூபித்தால் நான் பார்த்துக்கொள்வேன் எனவும் கூறினார். அப்படி சொல்லியவர் அதற்கு பிறகு அந்த டெஸ்ட்டில் கலந்துகொள்ளவில்லை. இதனால் இவ்விவகாரம் சிந்துபாத் கதை போல் நீண்டுகொண்டே சென்றது.
டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்: நிலைமை இப்படி இருக்க அவர் ஒருவழியாக மரபணு சோதனையில் பங்கேற்றார். அதில், அந்தக் குழந்தை ரங்கராஜுக்கு பிறந்ததுதான் என்பது உறுதியானது. இத்தனை கால போராட்டத்தில் தமக்கு சாதகமான முடிவு வந்ததை நினைத்து உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார் ஜாய். அவரது நண்பர்கள், உறவினர்கள், சினிமா ரசிகர்கள் என பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்தையும் தெரிவித்தார்கள். இனிமேல் அவர் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்றும் விருப்பப்படுகிறார்கள்.
எப்படி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்: இந்த ரிசல்ட்டுக்கு பிறகு ரங்கராஜ் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். சமையல், குக் வித் கோமாளி என பிஸிதான். ஜாயும் இதர வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார். நேற்றுகூட ஒரு போஸ்ட்டில் ஜாய் கிரிஸில்டா, "டி.என்.ஏ டெஸ்ட் முடிவுகளுக்கு பிறகு என்ன நடந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி இருக்கிறார் என்று கேட்கிறவர்களுக்கான அப்டேட் இதோ. மாதம்பட்டி ரங்கராஜ் மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொண்டிருக்கிறார்" என குறிப்பிட்டிருந்தார். அதை பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
இன்னொரு போஸ்ட்: அதேபோல் தன் மகன் ராகா விளையாடும் வீடியோவை பகிர்ந்து, "எனது அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் எப்போதும் என்னை விட்டு போகமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார். அவர் உனக்காக வாழ்வேன், எதையும் எதிர்கொண்டு போராடுவேன், உனக்காக வாழ்ந்து உன்னை பெருமைப்பட வைப்பேன் என கூறினார்" என்று குழந்தை கூறும்படி கேப்ஷனை போட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
