முதல் மனைவி காலில் விழுந்து கெஞ்சினாரா மாதம்பட்டி? விஜய் டிவி விழாவிற்கு ஜோடியாக வர காரணம் இதுதான்

சென்னை: சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை 2வதாக திருமணம் செய்து விட்டு ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். மேலும், அவருடன் எடுத்துக்கொண்ட எடுத்த பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவியின் காலில் விழுந்து கெஞ்சி அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்.

பிரபல ஆடை வடிவமைப்பாளரானர் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு புயலை கிளப்பினார். மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஸ்ருதி என்கிற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், ஜாய் கிரிஸில்டாவை எப்படி இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நேரத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Madhampatty Rangaraj shruthi joy crizildaa
Photo Credit:

காலில் விழுந்து மன்னிப்பு: ஒரு பக்கம் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தான் என் கணவர், என் குழந்தையின் அப்பா அவர் தான் என பேட்டிக்கு மேல பேட்டி கொடுத்து தினமும், இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த வீடியோவை வெளியிட்டு கண்கலங்கி வருகிறார். ஜாய் கிரிஸில்டா விஷயம் தெரிந்தும், ஸ்ருதி, அந்த பிரச்சனை பற்றி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தனது கணவர் மாதம்பட்டியை மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழும் முடிவுக்கும் அவர் வந்துவிட்டார். அதற்கு காரணம், மாதம்பட்டி ரங்கராஜ், தனது மனைவி ஸ்ருதியின் காலில் விழுந்து செய்த தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால்,ஸ்ருதி மனம் மாறி தனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து மன்னித்துள்ளார். அதனால் தான் இருவரும் சேர்ந்து விஜய் டிவி விருது வழங்கும் விழாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

பாவம் ஜாய்: ஜாய் கிரிஸில்டா விவாகரத்து ஆகாத ஒரு ஆணை சொன்ன வார்த்தைகளை நம்பி குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயானது மிகப்பெரிய தவறு. அந்த விஷயமே தற்போது மாதம்பட்டி ரங்கராஜூக்கு சாதகமாக மாறிவிட்டதால், அவர் ஜாய்யை கை கழுவி விட்டு மீண்டும் தனது முதல் மனைவியுடன் வலம் வர தொடங்குகிறார். இரண்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாட்டுவிட்டு, இதுவரை எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து வருவது மிகப்பெரிய தவறு என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X