ஜாய் கிரிசல்டா போட்ட பக்காவான பிளான்.. காவல்துறை வைத்த செக்.. விசாரணைக்கு ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசல்ட்டாவின் விவகாரம் சமீப வாரங்களாகவே சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தின் முக்கிய திருப்பமாக, ஜாய் கிரிசல்ட்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். சில தினங்களுக்கு முன்னர் ஜாய் கிரிசல்ட்டா விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை, குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றப்பிரிவு ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

அவர் தனது புகாரில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது கர்ப்பத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம் என்றும், தனது குழந்தையின் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரை அடுத்து செய்தியாளர் சந்திப்பிலும் அவர் இதனையே தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் அவருக்கு அனுப்பிய வீடியோக்களையும் ஜாய் கிரிசல்ட்டா தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இது, இந்த விவகாரத்தை நாளுக்கு நாள் பூதாகரமாக மாற்றி வருகிறது.

Madhampatty Rangaraj Auger At Deputy Commissioner of Crime Against Women and Children Joy Crizildaa Complaint

இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணையத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஜாய் கிரிசல்ட்டா தொடர்ந்து குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் எந்த சலனமும் இல்லாமல், விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஜாலியாக இருக்கிறார் என்று பலர் விமர்சித்துள்ளனர். இதற்கிடையில், ஜாய் கிரிசல்ட்டா ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும்போதும், சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போதும் "ரங்கராஜ்" என்று மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைப் பரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாய் கிரிசல்ட்டாவால் கடந்த 15 நாட்களில் தனது கேட்டரிங் நிறுவனத்திற்கு சுமார் ரூ. 12.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

புகார்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்னர் அதாவது, செப்டம்பர் 22ஆம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், ஜாய் கிரிசல்ட்டா கலந்து கொண்டார். விசாரணையின் போது, ஜாய் கிரிசல்ட்டா தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

விசாரணைக்கு ஆஜர்: இந்த விசாரணை, சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகப் பலரும் கூறி வருகின்றனர்.ஏனெனில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது சட்டப்படி தவறு. எனவே, அவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றும், விசாரணைக்குப் பின்னரே இந்த வழக்கு அடுத்த கட்டத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். ஜாய் கிரிசல்ட்டாவிடமே காவல்துறை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தது. அப்படி இருக்கையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் எத்தனை மணி நேரங்கள் விசாரணை நடத்துமோ என்று பலரும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X