ஜாய் கிரிஸில்டா அந்த அடி அடிக்கிறாங்க.. மாதம்பட்டி ரங்கராஜ் எங்கே இருக்காரு பாருங்க.. அசால்ட்டுதான் போங்க

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் நடந்த இரண்டாவது திருமணத்தின் பஞ்சாயத்து இன்னமும் முடிந்த பாடில்லை. டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இன்னும் செல்லாமல் இருக்கிறார் ரங்கராஜ். கிரிஸில்டாவோ அவரை தாக்கியும், கிண்டல் செய்தும் எக்கச்சக்க போஸ்ட்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுக்கொண்டே இருக்கிறார்.

ஸ்ருதியை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான மாதம்பட்டி ரங்கராஜ்; ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்து; ரகசிய திருமணமும் செய்துகொண்டார். ஆனால் திருமணம் செய்துவிட்டு உறவிலிருந்து வெளியே வர பார்த்ததாக தெரிகிறது. உடனே காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் புகார் கொடுத்ததும்; அதற்கு சிந்துபாத் கதை போல் இந்தப் பிரச்னை நீண்டுகொண்டே செல்வதும் அனைவருமே அறிந்ததுதான்.

ரங்கராஜ் சைலெண்ட் மோட்: இவ்விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் இன்னமும் பெரும்பாலும் சைலெண்ட் மோடிலேயே இருக்கிறார். முதலில் இரண்டாவது திருமணத்தை ஒத்துக்கொண்டதாக சொன்னார்கள். ஆனால் அவரோ அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்தார். அதனையடுத்து குழந்தையை டி.என்.ஏ டெஸ்ட்டில் என்னுடையதுதான் என நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் சொல்லிவிட்டார்.

Madhampatty Rangaraj Avoids DNA Test Uploads Relaxed New Photo
Photo Credit:

ஜாய் கிரிஸில்டாவின் முயற்சி: ஆனால் அப்படி சொல்லிய அவரோ; இன்னமும் அந்த பரிசோதனைக்கு செல்லவில்லை. அவரை எப்படியாவது வர வைத்துவிட வேண்டும் என ஜாய் கிரிஸில்டாவும் பல வழிகளில் முயன்று பார்க்கிறார். சில சமயங்களில் எமோஷனலாகவும், சில சமயங்களில் ட்ரோல் செய்தும், சில சமயங்களில் சாபம் விட்டும் என அவர் அத்தனை விதங்களிலும் போஸ்ட் போடுகிறார். ஆனால் ரங்கராஜோ அமைதியாகவே அதை கடந்து செல்கிறார்.

மகனின் செயல்: நேற்றுகூட மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரியே ஜாய் கிரிஸில்டாவின் மகன் இரண்டு விரல்களையும் மடக்கி வைத்திருந்த புகைப்படத்தை பகிர்ந்து, 'இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்' என்று கேள்வி கேட்டிருந்தார். பலரும் அதை பார்த்து இந்த விவகாரத்துக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வரும். மாதம்பட்டி ரங்கராஜ் இத்தனை நடந்த பிறகும் இவ்வளவு அசால்ட்டாக இருக்கக்கூடாது என்று கமெண்ட்ஸ் செய்தார்கள்.

கேஷுவல் மாதம்பட்டி: ஒருசிலரோ உங்கள் பிரச்னையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் ஏன் இப்படி தொடர்ந்து போஸ்ட்டாக போடுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்க; மாதம்பட்டி ரங்கராஜோ ரொம்ப கேஷுவலாக ஜிம்மில் அமர்ந்திருக்கும் புகைபடத்தின் பின்னணியில் அனிருத்தின் இசையை எடிட் செய்து சேர்த்து வெளியிட்டிருக்கிறார். மேலும் அதற்கு கேப்ஷனாக, Elevating-inside and out என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X