ஜாய் கிரிசல்ட்டா கதறினாலும் கண்டுகொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ்.. முதல் மனைவியுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசல்ட்டா பஞ்சாயத்து என்னதான் மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்களின் சமூக வலைதள பதிவுகள் என்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படி இருக்கும்போது, மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் தனது குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொண்டு, தற்போது தன்னுடன் வாழ மறுக்கிறார். எனது குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஜாய் கிரிசல்ட்டா. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்களின் இந்த பஞ்சாயத்து தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திலும் காவல் நிலையத்திலும் விசாரணையில் உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்: இப்படி இருக்கும்போது, ஜாய் கிரிசல்ட்டாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது ஆண் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் சூட்டினார் ஜாய் கிரிசல்ட்டா. மேலும் தனது குழந்தைக்கு அவர்தான் அப்பா, அதை அவர் மறுக்கிறார் என்றால், டி.என்.ஏ பரிசோதனைக்கு அவரை வரச் சொல்லுங்கள் என்று கூறினார். அதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜும் அந்த குழந்தை என்னுடைய குழந்தை என்றால், அதன் அத்தனை பொறுப்பும் என்னுடையது என்றும், ஜாய் கிரிசல்ட்டா தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என்று எல்லாம் பதிவிட்டார். அவர்கள் பஞ்சாயத்து எப்போதுதான் தீர்வை எட்டும் என்று எல்லாம் ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு நிலை ஏற்பட்டுவிட்டது.
அட்டாக் ஜாய்: தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் மாதம்பட்டி ரங்கராஜை அட்டாக் செய்து வரும் ஜாய் கிரிசல்ட்டா கடைசியாக நேற்று அதாவது டிசம்பர் 31ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய வீடியோவை பகிர்ந்து பதிவிட்டிருந்தார். அதாவது, " ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்து, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல." ஒரு குழந்தைக்கு பெயர் கொடுக்க தைரியம் இல்லாதவன்....தந்தை என்ற உண்மையை விட்டு ஓட முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்: இதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து ஏதாவது பதில் வருமா என்று பலரும் காத்துக் கொண்டு இருந்த நிலையில் தனது முதல் மனைவி ஸ்ருதி, மற்றும் மகன்கள் இருவருடனும் இணைந்து 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











