வீடியோவை காட்டி மிரட்டல்? அது என் குழந்தையா? ஜாய் நிரூபிக்கட்டும்? மாதம்பட்டி ரங்கராஜ்!

சென்னை: ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவோ, குழந்தைக்கு நான் தான் தந்தை என்றோ மகளிர் ஆணையத்தில் குறிக்கப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுத்ததில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். இதே விவகாரத்தை ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்திலும் புகாராக அளித்திருந்தார்.

Madhampatty rangaraj
Photo Credit:

ஜாய் கிரிஸில்டா புகார்: அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணையும் நடந்தது. விசாரணையின் போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, நேற்று விசாரணை முடிந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, நேற்று மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை: இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், நான் ஜாயை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன் ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிப்படுவதாக பலமுறை மிரட்டியதால் இந்த திருமணம் மிரட்டலில் பேரில் நடந்தது செப்டம்பர் 2025-ல் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலங்களை நான் ஏற்கனவே அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாக.

மிரட்டினார்: கமிஷன் முன்பு நடந்த அனைத்து நடவடிக்கைகளின் போது ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ1,50,000 பராமரிப்பு தொகையாகவும் தனது BMW காருக்கு ரூ1.25 லட்சம் மாதாந்திரம் இஎம்ஐ கட்ட செலுத்த வேண்டும் என்றும் கூறினார். நான் அந்த கோரிக்கையை மறந்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்த குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்று கூறினேன்.

மேல்முறையீடு செய்வேன்: இந்த வாக்குமூலம் ஏற்கனவே 1000 விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரியும் முன் செப்டம்பர் 2025 அன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடுஈ செய்வேன். மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டப்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும் ஏன்று மாதம்பட்டி ரங்கராஜ் தனது instagram பக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X