எனக்கு நடந்த துரோகம்.. மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவிக்கு என்னாச்சு?.. திடீர்னு இப்படி பேசுறாங்க

சென்னை: ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்; ரகசியமாக ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஒருகட்டத்தில் அந்தத் திருமண வாழ்க்கை வெளியே தெரிந்துவிட்டது. தெரிந்தது மட்டுமின்றி தீராத பஞ்சாயத்தாகவும் மாறியிருக்கிறது. இவ்விவகாரத்தில் தனது கணவருக்கு கடைசிவரை உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்திருந்த ரங்கராஜின் முதல் மனைவி இப்போது போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் பல கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டின் ஃபேமஸான சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் ஜாய் கிரிஸில்டாவையும் ரகசிய திருமணம் செய்து சில வருடங்கள் குடித்தனம் நடத்தவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவரிடமிருந்து விலக முற்பட; உஷாரான கிரிஸில்டா தங்களது திருமண புகைப்படங்களை வெளியிட்டு; அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்.

குழந்தை பிறந்தது: அதுமட்டுமின்றி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் சமீபத்தில்தான் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதேசமயம் அந்தக் குழந்தை தன்னுடையதுதான் என்பதை டி.என்.ஏ டெஸ்ட்டில் நிரூபித்தால் நான் அக்குழந்தையை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் ரங்கராஜ். அப்படி கூறியிருந்தாலும் இதுவரை அவர் அந்த சோதனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Madhampatty Rangaraj First wife Shruthi s new Insta post sparks questions She Said Grateful to heart
Photo Credit:

ஸ்ருதியின் சப்போர்ட்: இதற்கிடையே இவ்விவகாரம் பூதாகரமானபோது ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி இதை எப்படி ஹேண்டில் செய்யப்போகிறார் என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் இருந்தது. ஆரம்பத்தில் அத்தனைக்கும் அமைதியாக இருந்த ஸ்ருதி; மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது தனது கணவரோடு வந்திருந்தது ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியது.

உறுதி எடுத்த ஸ்ருதி: அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் தனது கணவருக்குத்தான் உறுதுணையாக இருப்பேன். அவரை இறுதிவரை காப்பாற்றுவேன். எங்களை பிரித்து பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் வேலை என்று அதிரடியாக கூறியிருதார். அவரது இந்த நிலைப்பாடு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மேலும் அவர் இப்படி இருப்பதால்தான் ரங்கராஜ் தைரியமாக தவறு செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் விட்டு விளாசிவருகிறார்கள்.

ஸ்ருதியின் இன்ஸ்டா போஸ்ட்: இந்நிலையில் ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தனது புகைப்படத்தை பகிர்ந்து, " உடைந்த தருணங்கள், பதற்றத்தை உருவாக்கக்கூடிய தாக்குதல்கள், துரோகங்கள், விமர்சனங்கள், அவதூறுகள் என எத்தனை நடந்தாலும் எந்தப் பாவத்திலும் ஈடுபடாமல் வலுவாக இருந்த எனது இதயத்துக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ருதிக்கு என்ன ஆச்சு?: அவரது இந்தப் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, 'என்ன ஆனாலும் ரங்கராஜுக்கு கடைசிவரை துணை இருப்பேன் என்று ஸ்ருதி சொன்னார். இப்போது தனக்கு துரோகம் நடந்துவிட்டதாக கூறுகிறார். எனில் அந்த துரோகத்தை செய்தது மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறாரா.. இப்படி திடீர் மாற்றத்துக்கு என்ன காரணமாக இருக்கும்' எனவும் கேள்வியை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X