'வீடு பணம்' ஜாய் கிரிசல்ட்டா செம தெளிவுதான் போல.. ஆதாரத்தை வெளியிட்ட மாதம்பட்டியின் முதல் மனைவி

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ்க்காக அவரது முதல் மனைவி ஸ்ருதி இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்ட்டா ஆகியோருக்கு இடையே பெரும் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இதில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவிக்கு சாதகமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதில் தான் பிளாக்மெயில் செய்யப்பட்டதால் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் தெரிவித்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதன் பின்னர் ஜாய் கிரிசல்ட்டா பேசி வெளியிட்ட மூன்று வீடியோக்கள், அதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிசல்ட்டாவும் நெருங்கிப் பழகி வந்த காலகட்டத்தில் ரங்கராஜ் தனக்கு அனுப்பிய தனிப்பட்ட வீடியோவை பகிர்ந்தார். இது பலருக்கும் ஷாக் கொடுத்தது. இது தொடர்பான பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி பிரியா வெளியிட்டுள்ள பதிவும் பகிர்ந்து உள்ள சில ஆதாரங்களும் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.

Madhampatty Rangaraj First Wife Shruthi Rangaraj Share Some Proofs Against Joy Crizildaa
Photo Credit:
அவரது பதிவில், " மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025-இலேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக்கொணர்கிறது. அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாகி உள்ளது. அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் - "எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்", "நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது.

அந்தக் affirmation-ல் சில பகுதிகள்:

பிரிவு 4: "என் பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும்.

பிரிவு 6: "ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும்."

பிரிவு 8: "ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும்." மற்றும் *ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும்."

பிரிவு 9: "இப்போது எனக்கு ரூ.10,00,000 வேண்டும்."

பிரிவு 12: "ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்.

இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம் - பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது - என்பதை தெளிவாக காட்டுகின்றன. நான் என் கணவர் ரங்கராஜ் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜாய் கிரிசல்ட்டா தனக்கு வாட்ஸ்-ஆப்பில் அனுப்பிய செய்திகள், மற்றும் அவரே கைப்பட எழுதியதாக தெரிவித்துள்ள கடிதம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் ஜாய் கிரிசல்ட்டாவும் ரொம்பவும் தெளிவுதான் போல என்று விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X