மாதம்பட்டி ரங்கராஜுக்கு நடிகையின் சப்போர்ட்.. ஸ்ருதியின் அமைதிக்கு காரணம் இதுதான்.. புது ரூட்டா இருக்கே
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ரங்கராஜ் அனைத்தையும் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதனை மறுத்துவிட்டார் அவர். அதனையடுத்து அவரை கடுமையாக விமர்சித்திருந்த ஜாய்; இன்று புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதற்கிடையே வெளிநபர் ஒருவர் உள்ளே நுழைந்து சட்டப்பூர்வ மனைவியை துரத்த நினைத்தால் கைவிடாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின்பேரில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேரிடமும் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைக்கு முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார் ரங்கராஜ். அப்போது தனக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது உண்மைதான் என்று ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையமே தெரிவித்திருந்தது. ஆனால் அதனை திடீரென மறுத்தும்விட்டார் மாதம்பட்டி.
அவரது அறிக்கை: இதுகுறித்து அவர் அளித்திருந்த விளக்கத்தில், "நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.

ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ.1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI செலுத்த வேண்டும் என்றும் கோரினார், நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று டிஎன்ஏ டெஸ்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன்.
கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ: அவர் இப்படி மறுத்ததை ஜாய் கிரிஸில்டா எதிர்பார்க்கவில்லை. இதனால் கடுப்பான அவர் மாதம்பட்டியை கடுமையாக தாக்கி பேசி இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி தன்னிடம் ரங்கராஜ் கொஞ்சி பேசிய வீடியோவையும் இன்று காலை களமிறக்கியிருந்தார். இப்படி உச்சக்கட்ட பரபரப்பில் இந்த விவகாரம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் நடிகை ஷர்மிளா இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.
ஷர்மிளா பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "ரங்கராஜை கேவலப்படுத்ததான் இதுமாதிரி ஜாய் கிரிஸில்டா செய்கிறார். ஸ்ருதி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று எல்லோரும் கேட்கிறார்கள். நான் ஸ்ருதிக்குத்தான் முழுக்க முழுக்க சப்போர்ட் செய்வேன். ஜாயும்,ரங்கராஜும் ஒன்றாக இருந்தபோது ஸ்ருதி அமைதியாக இருக்க காரணம் என்ன தெரியுமா?; ஒரு தகப்பனாக இரண்டு குழந்தைகளையும் மாதம்பட்டி பார்த்துவந்திருக்கிறார். உறவினர்களுடன் சென்று ஜாயுடன் ஸ்ருதி பிரச்னை செய்திருந்தால்; நம்மை நம்பி வந்த ஜாய் கிரிஸில்டாவை மனைவி ஸ்ருதி அசிங்கப்படுத்திட்டாரே என்று அந்தப் பெண் மேல்தான் சாஃப்ட் கார்னர் கொண்டிருந்திருப்பார். அதனால்தான் ஸ்ருதி அமைதியாக இருந்தார்.
குழந்தைகள் பாவம்: இதில் குழந்தைகள்தான் பாவம். இப்படிப்பட்ட பையன்தான் சைக்கோவாக மாறுவான். யாருக்கும் தெரியாமல் இந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அந்தப் பையம் அமைதியாக சந்தோஷமாக இருந்திருப்பான். ஜாய் கிரிஸில்டா செய்வது எல்லாமே சரி என்று சொல்கிறீர்கள். அந்தப் பையனை யாராவது நினைத்து பார்த்தீர்களா" என்றார்.


Click it and Unblock the Notifications











