Napoleon Son: நெப்போலியன் மகனைச் சந்தித்த மாதம்பட்டி ரங்கராஜ்.. என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?

அமெரிக்கா: நெப்போலியன் என்றால் மாவீரன் நெப்போலியன் நினைவுக்கு வருகிறாரோ இல்லையோ, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எட்டுப்பட்டி ராசா நெப்போலியன் நினைவுக்கு வந்துவிடுவார். அந்த அளவுக்கு நெப்போலியன் என்ற கம்பீரமான பெயருக்கு தனது நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்தவர். இவரது மூத்த மகன் தனுஷ் இணையதள வாசிகள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல அறிமுகத்தை கொண்டிருக்க கூடியவர். சில மாதங்களுக்கு முன்னர் அவரது திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் நெப்போலியன் குடும்பத்தினரை சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோபி எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு மரபணு குறைபாடு ஆகும். இதன் காரணமாக தசைகள் படிப்படியாக வலுவிழந்து, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். இந்த நிலையினால், தனுஷ் அன்றாட நடவடிக்கைகளை செய்து வருகிறார். அவருக்கு அவரது பெற்றோர்களும் மனைவி அக்‌ஷயாவும் உதவி வருகிறார்கள்.

Madhampatty Rangaraj Meets Napoleon Son Dhanoosh Nepoleon Video Goes Trending
Photo Credit:

மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள நாஷ்வில், டென்னசியில் வசித்து வருகிறார். அங்கு மஸ்குலர் டிஸ்ட்ரோபி உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள் இருப்பதால், தனுஷ் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்பதால் தனுஷ்க்காகவே மொத்த குடும்பமும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

நெப்போலியனின் மகன் தனுஷ், தனது உடல்நிலையைப் பற்றி புரிந்து கொண்டு, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், "முயற்சியை விடாதீர்கள்" என்று உத்வேகம் அளிக்கும் செய்திகளையும் அவர் பகிர்ந்து வருகிறார். தனுஷின் தைரியத்தையும், மன உறுதியையும் நெப்போலியன் பலமுறை பாராட்டியுள்ளார். தனுஷை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில், தனது நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்குச் சென்ற நடிகரும் சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ், அங்கு நடிகர் நெப்போலியன் குடும்பத்தினரைச் சென்று சந்தித்துள்ளார். மேலும் தனுஷைச் சந்தித்து அவரிடமும் பேசினார். அப்போது திருமணத்திற்கு நாங்கள் சமையல் செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை.

Madhampatty Rangaraj Meets Napoleon Son Dhanoosh Nepoleon Video Goes Trending
Photo Credit:

நிச்சயதார்த்ததிற்கு சமையல் செய்தது நாங்கள்தான். எங்க சமையல் உங்களுக்கு பிடித்திருந்ததா? எனக் கேள்வி கேட்டார். அதற்கு நெப்போலியனின் மனைவி, உங்க சமையலை தனுஷ் இன்னும் ருசித்துக் கூட பார்த்ததில்லை எனக் கூறினார். இவ்வாறாக அந்த உரையாடல் நீண்டு கொண்டே போனது. இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நெப்போலியன். இப்போது இந்த வீடியோ இணையதள வாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X