மாதம்பட்டி ரங்கராஜ் உடன் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன்.. அன்பு தங்கச்சி அதிதி ஷங்கரை மறந்துட்டாரா?
சென்னை: சினிமாவில் மார்க்கெட் இல்லை என்றால் சிலரை அப்படியே மறந்துவிடுவார்கள் என்று சொல்வார்கள். மாதம்பட்டி ரங்கராஜும் அப்படி அதிதி ஷங்கரை மறந்துவிட்டாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு காரணம் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் முரளி படத்தில் நடித்த இளம் நடிகைகள் கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் உடன் எடுத்தக் கொண்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஆனால், இன்று பிறந்தநாள் காணும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு எந்தவொரு வாழ்த்து போஸ்ட்டும் போடவில்லையே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2வது மனைவியுடன் பஞ்சாயத்து: சமையல் கலை வல்லுநர் மற்றும் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் ஹீரோவான மாதம்பட்டி ரங்கராஜுக்கு சுருதி என்கிற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையே ஜாய் கிரிஸில்டா எனும் ஆடை வடிவமைப்பாளரை காதலித்து ரகசியமாக திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால், அவருடன் என்ன பிரச்னை ஏற்பட்டது என தெரியவில்லை. அவரை விட்டுப் பிரிந்து மீண்டும் முதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். ஜாய் கிரிஸில்டா திடீரென கர்ப்பமான நிலையில், அந்த குழந்தைக்கு நான் அப்பா இல்லை என்றார். ஆனால், டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்குப் பிறகு தனது பேச்சை மாற்றிக் கொண்டார்.
கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உடன்: இதயம் முரளி படத்தில் மாதம்பட்டி ரங்கராஜும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி செட்டில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ளார். வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ள இதயம் முரளி படத்துக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கச்சி அதிதி ஷங்கரை மறந்துட்டீங்களா?: கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி ஷங்கர் மகள் அதிதி ஷங்கருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அன்பு தங்கை அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார். ஆனால், இந்த ஆண்டு இளம் நடிகைகள் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் வந்ததும் அன்புத் தங்கச்சி அதிதி ஷங்கரை மறந்துட்டீங்களா என குரேஷி பாணியில் நெட்டிசன்கள் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்து வருகின்றனர். நடிகை அதிதி ஷங்கர் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications