ஜாய் கிரிஸில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் மகன் இவ்வளவு வளர்ந்துட்டாரே.. பிரச்னை ஓவர்.. எவ்வளவு க்யூட் பாருங்க

சென்னை: ஜாய் கிரிஸில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்ததும் அதிலிருந்து ரங்கராஜ் முயன்றதாகவும்; அதன் காரணமாக இதனை வெளியே கொண்டு வருகிறேன் என்று சொல்லியும் அதிரடி செயலில் ஈடுபட்டார் ஜாய். அந்தப் பிரச்னை நீண்ட இழுபறிக்கு பின் சில மாதங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் வெற்றி பெற்றதற்காக ஜாய்க்கு பலரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணந்திருந்தார். ஆசை வந்து அவரை ஆட்டி வைத்ததால் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டபோது கிரிஸில்டா கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவரிடமிருந்து ரங்கராஜ் வேறு ரூட்டை பார்க்க முயல; காண்டான கிரிஸில்டா தங்களுக்குள் நடந்த திருமணத்தை வெளியே கொண்டு வந்து; ரங்கராஜ் மீது புகாரும் அளித்தார்.

Madhampatty Rangaraj s Son Turns 6 Months Joy Crizildaa s Cute Post Trends Online
Photo Credit:

நீண்ட இழுபறி: இந்தப் பிரச்னை நீண்ட காலம் நடந்தது. முதலில் ஜாய் வாய்க்கு பூட்டு போட நீதிமன்றம் சென்றார் மாதம்பட்டியார். அங்கே நீதிமன்றம் குட்டு வைத்து அனுப்பியது. அதனையடுத்து தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் நடந்த விசாரணையில் ஆஜரானார். அப்போது டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து; பிறந்திருக்கும் குழந்தை என்னுடையதுதான் என்பதை நிரூபித்தால்; காலம் முழுக்க அந்த ஆண் குழந்தையை பார்த்துக்கொள்ள தயார் என வாக்குறுதி அளித்தார்.

டிமிக்கி கொடுத்த மாதம்பட்டி: அவர் அப்படி சொன்னதோடு சரி; நீண்ட காலம் அந்த பரிசோதனையில் கலந்துகொள்ளவில்லை. ஒருவழியாக கலந்துகொண்டபோது அந்தக் குழந்தை அவருக்கு பிறந்தது என்பது உறுதியானது. இதன் காரணமாக சிந்துபாது கதை போல் நீண்டுகொண்டிருந்த அவர்களது பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் வென்றதற்காக ஜாய் கிரிஸில்டாவுக்கு அனைவருமே தங்களது வாழ்த்துகளை கூறினார்கள். அவரும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்துவருகிறார்.

ஸ்ருதியுடன் பிரச்னை: இந்தப் பிரச்னை ஓய்ந்த சில நாட்களிலேயே ஜாய்க்கும், ஸ்ருதிக்கும் சோஷியல் மீடியாவில் பிரச்னைகள் உருவாக தொடங்கின. இரண்டு பேரும் மாற்றி மாற்றி மறைமுகமாக போஸ்ட்டுகளை போட்டு தாக்கி கொண்டார்கள். அதை பார்த்த ரசிகர்களோ, இப்போதுதான் ஜாய் - மாதம்பட்டி பிரச்னை முடிந்தது. இப்போது இவர்கள் புதிதாக கிளப்புகிறார்களே; இதுக்கு இல்லையா சார் எண்டு என்று கலாய்க்கவும் தொடங்கினார்கள். அதையெல்லாம் அவர்கள் இரண்டு பேருமே கவனித்திருப்பார்கள் போல. படிப்படியாக போஸ்ட்டுகள் போடுவதை நிறுத்திவிட்டார்கள்.

ட்ரெண்டாகும் பதிவு: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது மகன் மாதம்பட்டி ராகா ரங்கராஜின் புகைப்படத்தை இப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அதில், "அப்படியே ஆறு மாதங்கள் க்யூட்னஸ் ஓவர் லோடட்.. எங்களுடைய சின்ன மகன் வளர்ந்துகொண்டிருக்கிறான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ, அட ரங்கராஜ் மகன் இவ்வளவு வளர்ந்து செம க்யூட்டாக இருக்கிறானே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X