ஜாயின் வழக்கே செல்லாதுனு சொன்னவங்களுக்கு சம்மட்டி அடி.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்!

சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தனது சமூகவலைத்தள பக்கத்தில், தொடர்ந்து மாதம்பட்டியுடன் இருக்கும் போட்டோவையும் வீடியோவையும் வெளியிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும், அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் "மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை 17ந் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜாய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

Madhampatty Rangaraj Joy Crizildaa
Photo Credit:

மாதம்பட்டி ரங்கராஜ்: இதையடுத்து, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் "மாதம்பட்டி பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தின் ஹேஷ்டேக் பதிவுகளால் 11 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், என்னுடைய நிறுவனம் திருமண கேட்ரிங் நிறுவனம், இதுகுறித்து இணையத்தில் தேடினால், மாதம்பட்டி சமையல் மேனுவிற்கு பதில், ஜாய் கிரிஸில்டா பதிவு செய்த போட்டோ மற்றும் வீடியோக்கள் வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனிபட்ட பிரச்சனை காரணமாக ஒரு நிறுவனம் பாதிக்கக்கூடாது என மாதம்பட்டி தரப்பி வழக்கிறஞர் வாதிட்டார்.

சம்மன் அனுப்பப்பட்டது: இதையடுத்து வாதாடிய, ஜாய் கிரிஸில்டா தரப்பு வழக்கறிஞர், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவையும், பிறக்க போகும் குழந்தையும் ஏமாற்றியதை குறித்து தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு குற்ற வழக்கை வணிக வழக்காக மாற்றப்பார்க்கிறார்கள். ஜாய் கிரிஸில்டா பகிர்ந்த போட்டோவிற்கும், மாதம்பட்டி பாகஷாலா நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறுவதற்கு எந்த வகையிலும் ஜாய் கிரிஸில்டா பொறுப்பேற்க முடியாது வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ஜாய் கிரிஸில்டா சில வாரங்களுக்கு முன்பு அளித்திருந்த புகார் குறித்து விசாரணையும் நடைபெற இருக்கிறது. இதற்காக, நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் நாளை மறுநாள் நீலங்கரை காவல்நிலையத்தில் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X