விஜய் சார்.. அந்த பெண்ணை விரட்டி அடிங்க.. சங்கீதாவிற்கு ஆதரவாக களமிறங்கிய மாதம்பட்டியின் மனைவி!
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா, அவரிடம் இருந்து விவகாரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த செய்தி நேற்று இணையத்தில் பேசுபொருளான நிலையில்,மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் சங்கீதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் மனைவி சங்கீதா நேற்று 28 பாயிண்டுகளை குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். நன்றாக சென்று கொண்டிருந்த எங்கள் திருமண வாழ்க்கையில் நடிகை ஒருவர் வந்த பின் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டது.
அதன் பின் நான் பிரிந்து சென்றுவிட்டேன். மீண்டும் சமரசப்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, என் கணவர் அந்த நடிகையுடனான உறவை முறித்துக்கொண்டு என்னுடன் வாழ்வதாக உறுதி அளித்தார். 2021ம் ஆண்டு ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம். ஆனால், மீண்டும் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தால், அவரிடம் பல முறை எடுத்து சொல்லியும் கேட்காததால், மிகுந்த மன உளைச்சலுடனும் வேதனையுடனும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன்.

சங்கீதா வேதனை: பொது நிகழ்ச்சிக்கூட அவர் என்னை அழைத்து செல்வதை தவிர்த்தார். அந்த நடிகையின் பெயரை நான் இப்போது வெளியிடவில்லை. ஆனால், என் கணவர் தரப்பில் இருந்து அழுத்தம் வந்தால், அந்த நடிகையை எதிர்மனுதாராக சேர்ப்பேன் என்றும், அவரின் வருமானத்திற்கும், இந்த சமூதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு ஏற்றபடி எனக்கு நிரந்தரமான ஜீவனாம்சம் வேண்டும் என கிட்டத்தட்ட 28 பாயிண்டுகளை குறிப்பிட்டுள்ளார்.
விரட்டி அடிங்க: இது இணையத்தில் வெளியாகி புயலை கிளப்பி இருக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், திருமணத்தை மீறிய உறவை வெட்கமின்றி கொண்டாடும் காலமாக இருக்கு. நான் சங்கீதா மேடமுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் எனப்பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில்,
"விஜய் சார்.. இரண்டாவது பெண்ணை விரட்டி அடிங்க, அன்பான மனைவி மற்றும் குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











