முதல் மனைவியுடன் சென்ற மாதம்பட்டி ரங்கராஜ்.. குழந்தைக்கு பெயர் வைத்த இரண்டாவது மனைவி.. ஒரே கூத்து
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் தனக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகவும்; ஆறு மாதம் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் ஜாய் கிரிஸில்டா. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது முதல் மனைவியுடன் மாதம்பட்டியார் சென்றிருந்தது விவாதமாகியது.
மெஹந்தி சர்க்கஸ் ஹீரோவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ஸ்ருதி வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். அவர்கள் இரண்டு பேருக்கும் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் போய்க்கொண்டிருந்தது.
ஜாய் பழக்கம்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவருடன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதுதொடர்பாக ரங்கராஜ் எதுவும் சொல்லவில்லை என்றாலும்; அவருடன் இருக்கும் புகைப்படங்கள்; அவர் தனக்கு வாங்கிக்கொடுத்த பொருட்கள் உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார் ஜாய். மேலும் தனது பெயருக்கு பின்னால் ரங்கராஜ் பெயரையும் சேர்த்திருந்தார்.

இரண்டாவது திருமணம்: ஜாய் கிரிஸில்டாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்தான். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மேலும் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார். அதுமட்டுமின்றி சில பயணங்கள் சத்தம் இல்லாமல் தொடங்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
முதல் மனைவியுடன்: முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் ரங்கராஜை பலரும் கண்டித்தார்கள். அவர் எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார். இந்த விவகாரமே ஓயாத நிலையில் சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதியுடன் கலந்துகொண்டார். அதனைப் பார்த்த ரசிகர்களோ மாதம்பட்டியின் வாழ்க்கையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது; தைரியமாக எல்லா விஷயங்களையும் செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
கிரிஸில்டாவின் பதிவு: ஸ்ருதியுடன் அவர் சென்றதை பலரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா புதிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது கர்ப்ப காலத்தில் செய்யப்படும் வழக்கமான சோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற அவர் அப்போது எடுத்த ஃபோட்டோவை ஷேர் செய்து; தங்கள் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ அவர் என்னடானா முதல் மனைவியுடன் நிகழ்ச்சிக்கு செல்கிறார்; இவர் என்னடானா குழந்தைக்கு பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார். என்ன கூத்தெல்லாம் நடக்கிறதோ என்று தங்களது கருத்தை கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











