நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.. 2வது திருமணம் பற்றி மௌனம் கலைத்த மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிரபல சமையல் கலைஞராகவும்; பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது டீமுடன் சமையல் செய்துகொடுப்பவராகவும் திகழ்பவர். அதுமட்டுமின்றி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையான இவர் இப்போது ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரதமர் முதல் தமிழ் சினிமா செலிபிரிட்டிகள்வரை பலருக்கும், அவர்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் சமையல் செய்துகொடுத்திருக்கிறார். இவரது சமையலுக்கு என்று டிமாண்ட் எப்போதுமே இருப்பதுண்டு. அதனை அவரும் சரியாக பயன்படுத்திக்கொண்டு தான் எடுக்கும் ஆர்டர்களில் நேர்த்தியாக சமையல் செய்து நல்ல பெயரை சம்பாதித்துவருகிறார்.
ஹீரோவாக அறிமுகமான ரங்கராஜ்: நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார் ரங்கராஜ். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக ரங்கராஜின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அதற்கு பிறகு பெரிதாக எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.

குக் வித் கோமாளி நடுவர்: வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கியே இருந்தாலும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்நிகழ்ச்சியிலிருந்து சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக ரங்கராஜ் அந்த நிகழ்ச்சியில் நடுவராக களமிறக்கப்பட்டார். தன்னால் முடிந்த அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்.
திருமணமான ரங்கராஜ்: இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவரது மனைவி பெயர் ஸ்ருதி. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த ரங்கராஜின் திருமண வாழ்க்கையில் கடந்த சில காலமாகவே புயல் அடித்தது. அதுமட்டுமின்றி, அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. கிரிஸில்டாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடினேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி அவர் தனக்கு பூ வாங்கித்தந்ததாக கூறிய ஜாய், தனது பெயரை 'ஜாய் ரங்கராஜ்' என்றும் எழுதிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க அவருக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தன. முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமலேயே 2வது திருமணம் செய்த ரங்கராஜ்தான் சினிமா ஹெட்லைன்ஸாக மாறினார். அதுமட்டுமின்றி தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா கூறியிருந்தார். இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டா போஸ்ட் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன பதிவு: அவர் அந்தப் பதிவில், "சில விஷயங்களை தெளிவுப்படுத்ததான் இந்தப் பதிவு. சில பயணங்கள் சத்தமே இல்லாமல் நம்பிக்கையால் மட்டும் வளரும். அப்படித்தான் நாங்களூம் சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவியாக வாழ்க்கையை தொடங்கினோம். அன்புடனும், கௌரவத்துடனும், பயணத்தை தொடங்கிய நாங்கள், இவ்வரும் ஒரு குட்டி நபரை வரவேற்க காத்திருக்கிறோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











