Kovai Guna: கோவை குணா இதனால் தான் இறந்தாரா? அசத்தப் போவது யாரு ஜட்ஜ் மதன் பாப் வேதனை பேட்டி

சென்னை: கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு என காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக பங்கேற்று தனது மிமிக்ரி திறமையால் பல கோடி ரசிகர்களை சிரிக்க வைத்த கோவை குணா நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

மதுரை முத்து, மதன் பாப் உள்ளிட்ட பிரபலங்கள் கோவை குணா மறைவு செய்தியை அறிந்ததும் ரொம்பவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நேரத்தில் இப்படி பேசக் கூடாது என்றாலும் என் மனசு தாங்கல என மதன் பாப் சொல்லி உள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தொடரும் பிரபலங்களின் மரணங்கள்

தொடரும் பிரபலங்களின் மரணங்கள்

காமெடி நடிகர்களாக மக்களை சிரிக்க வைத்து வரும் பலரும் சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது சினிமா துறைக்கு மட்டுமில்லாத ரசிகர்களுக்கும் பேரிழப்பாக மாறி வருகிறது. காமெடி நடிகர் விவேக், பாண்டு, மயில்சாமி என ஏகப்பட்ட பிரபலங்கள் உயிரிழந்து வருவது அவர்களுடன் பணியாற்றிய சக நடிகர்களையும் மனதளவில் ரொம்பவே பாதித்து வருகிறது.

கோவை குணா உயிரிழப்பு

கோவை குணா உயிரிழப்பு

கலக்கப் போவது யாரு சீசன் 1 டைட்டில் வின்னர் மற்றும் அசத்தப் போவது யாரு சாம்பியன் கோவை குணா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ரசிகர்களையும் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மதன் பாப் வேதனை

மதன் பாப் வேதனை

கலக்கப் போவது யாரு மற்றும் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சிகளுக்கு ஆரம்ப காலத்தில் நடுவராக இருந்து வந்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் கோவை குணா போல ஒரு திறமையான கலைஞனை இழந்து விட்டோமே என ரொம்பவே மனம் வருந்தி வேதனையுடன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில முக்கியமான விஷயங்களை கூறியுள்ளார்.

நிறைய கெட்ட பழக்கம்

நிறைய கெட்ட பழக்கம்

அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாப் கோவை குணாவின் தீவிர ரசிகன் நான் என்றும் தான் நடிக்க வேண்டிய சென்னை காதல் படத்தில் எனக்கு பதிலாக அவரை நடிக்க பரிந்துரைத்தேன் என்றார். ஆனால், அதன் பிறகு அதிகமாக சினிமா படங்களில் அவர் நடிக்கவே இல்லை. சினிமா கலைஞர்கள் அதிகளவில் கெட்ட பழக்கத்திற்கு ஆளாகி விடுவது தான் வெகு சீக்கிரமாகவே மரணித்து விடுகின்றனர் என்கிற விஷயத்தை வெளிப்படையாகவே பேசி உள்ளார்.

குடி போதை தான் காரணம்

குடி போதை தான் காரணம்

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியே பலரும் சீக்கிரமாக மாரடைப்பு ஏற்பட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டும் மரணித்து விடுகின்றனர். அதனை நம் மனது ஏற்பதே இல்லை. ஓரளவுக்கு எல்லாத்தையும் வச்சிக்கிட்டா நல்லா இருக்கும். தண்ணீரில் படகு போனால் ஓடும், படகுக்குள் ஓட்டை விழுந்து விட்டால் படகு தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இந்த நேரத்தில் இதனை பேசக் கூடாது என்றாலும் என் மனது கேட்கவில்லை என கோவை குணா மரணத்திற்கு மட்டுமின்றி சமீபத்தில் உயிரிழந்த சில பிரபலங்களின் உயிரிழப்புக்கு காரணமே இந்த குடி போதை தான் என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் மதன் பாப்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X