'கீர்த்தி சாவித்ரியாகவே ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகிட்டாங்க..' - மதன் கார்க்கி

கீர்த்தி சுரேஷ் நடிப்பு பற்றி மதன் கார்க்கி பேச்சு!

By Vignesh Selvaraj

Recommended Video

சாவித்திரியாக 3 மணிநேரம் மேக்கப் போட்ட கீர்த்தி சுரேஷ்

சென்னை : 'நடிகையர் திலகம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. பாடலாசிரியர் மதன் கார்க்கி, இப்படத்தைப் பற்றியும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு பற்றியும் பேசினார்.

"சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகத் தகவல் வந்ததுமே நிறைய பேர் விமர்சிக்க ஆரம்பிச்சாங்க. இது என்ன சாவித்ரிக்கு வந்த சோதனைனு ட்ரோல் பண்ணாங்க. படத்தை பல கட்டங்களில் பார்த்தேன். இந்தப் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவே மாறியிருக்காங்க.

madhan karki about nadigaiyar thilakam

ஒவ்வொரு அசைவும், கண்ணீரும், சிரிப்பும் ஒவ்வொரு காட்சியிலேயும் அப்படியே சாவித்ரியா மாறி இருக்காங்க. அவ்வளவு உழைப்பைக் கொடுத்திருங்காங்க. தமிழ், தெலுங்கு சினிமா ஷூட்டிங்கின்போது நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகா காட்சிப் படுத்தியிருக்காங்க.

சாவித்ரியை பற்றித் தெரியாத இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு இந்தப் படம் எப்படி கனெக்ட் ஆகும்ங்கிறது ஒரு கேள்வி. சாவித்ரி யாருன்னே சுத்தமா தெரியாத இந்த தலைமுறை ரசிகர்களையும் இந்தப் படம் கவரும். அதுக்குக் காரணம் இது யுனிவர்செல்லான சப்ஜெக்ட்.

புகழின் உச்சிக்குப் போக அவங்களோட உழைப்பு தான் காரணம். எங்கிருந்து வந்தாங்க.. எப்படி ஆரம்பிச்சாங்க. எப்படி அவ்வளவு புகழ் கிடைச்சதுங்கிறதை எல்லாம் இந்தப் படம் சொல்லுது. சம்பாதிச்ச அவ்வளவு புகழும் எப்படி ஒரு முடிவுல, கோவத்துல எல்லாத்தையும் இழந்துட்டு ஆரம்பிச்ச இடத்துல நிறுத்துற ஒரு உலகம் தான் இந்த சினிமா. அப்படி ஒரு கிராஃபை இந்தப் படம் கவர் பண்ணுது.

அவங்களோட குழந்தைப் பருவம் ஆரம்பிச்சு இறுதிவரைக்கும் பயணிக்கிற படமா இருக்கு. இந்தப் படத்துக்கு நான் பாடல் எழுதும்போது ரொம்ப பிடிச்சிருந்தது, ஜெமினி - சாவித்ரி இடையேயான காதல், இறுதி நாட்கள் எல்லாத்தையும் ரொம்ப அழகா படம் பிடிச்சிருந்தாங்க. துல்கர், கீர்த்தி ரெண்டு பேரும் அழகா பண்ணியிருந்தாங்க. சமந்தா, விஜய் தேவரகொண்டா ரெண்டு பேரும் நிருபர்களா சாவித்ரியோட கதையைச் சொல்றாங்க." எனத் தெரிவித்துள்ளார் மதன் கார்க்கி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X