இவர்தான் எனக்கு போட்டியாக வருவார் என்று நினைக்கவில்லை.. வைரமுத்து யாரை சொல்றாரு பாருங்க

சென்னை: Vairamuthu (வைரமுத்து) வைரமுத்து தனக்கு போட்டியாக யார் இருக்கிறார் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து தவிர்க்க முடியாதவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட்.

Madhan Karky is the My Opponent Says Lyricist Vairamuthu

பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை முதல்முதலாக எழுதினார் வைரமுத்து. முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என புதுமையாக எழுதி இளையராஜாவின் மனதிலும், ரசிகர்களின் மனதிலும் தனது தடத்தை பதித்துவிட்டார்.

ராஜா - வைரமுத்து கூட்டணி: அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகிவிட்டார் வைரமுத்து. அதிலும் பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தின. அவர்கள் இணைந்த முதல் மரியாதை, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை.

உடைந்த கூட்டணி: ஆனால் இளையராஜா - வைரமுத்து கூட்டணி உடைந்துபோனது. அதற்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டுமென பலர் முயன்றனர். ஆனால் இன்றுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. அதேபோல் ரோஜாவில் தொடங்கி பல படங்கள் இணைந்து பணியாற்றிய வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியும் உடைந்துபோனது.

பிஸி வைரமுத்து: முக்கியமான இரண்டு பேருடனான கூட்டணி உடைந்துபோனாலும் வைரமுத்து இன்னமும் பிஸியாகவே இருக்கிறார். அந்தவகையில் கட்டில் என்ற படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “கட்டில் மாதிரியான சிறிய பட்ஜெட் படங்கள் வருவது தமிழ் சினிமாவுக்கு முக்கியமான ஒன்று. அப்போதுதான் பல புதிய கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பார்கள்.

யார் போட்டி?: கண்ணதாசன், வாலி ஆகியோருடன் நான் போட்டிப்போட்டேன். அவர்களிடம் வெல்ல முடியாது என்று தெரிந்தும் அவர்களோடு நானும் இருக்கிறேன் என்பதற்காக நின்றேன். நான் என் மகன் மதன் கார்க்கியை வெளிநாடு அனுப்பி விஞ்ஞானம் படிக்க வைத்தேன். அவர் பேராசிரியர் ஆனார். இப்போது இந்தப் படத்தில் எனக்கு போட்டியாக அவர் அருமையான வரிகளை எழுதியிருக்கிறார். எனது மகன் எனக்கு போட்டியாக வருவார் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X