Don't Miss!
- Sports
தோனி, ரெய்னா சாதனையை முறியடித்த சூர்யகுமார்.. அறிமுகமாகி 2வது ஆண்டிலேயே தகர்த்து அசத்தல்.. விவரம்
- News
கி.வீரமணி மீது யாராவது கை வைத்தால் வெட்டுவேன்.. அது என் தர்மம்.. டி.ஆர்.பாலு பகிரங்க எச்சரிக்கை!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சுயநலமே இல்லாமல் எப்போதும் மற்றவர்களை ஊக்குவிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ராதே ஷ்யாமிற்காக பாட்டுடன், வசனமும் எழுதுகிறார் மதன் கார்க்கி
சென்னை : பாடலாசிரியர் மதன் கார்க்கி, ராதே ஷ்யாம் படத்திற்காக பாடலும், வசனமும் எழுத போகிறார். இந்த தகவலை மதன் கார்க்கியே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ராதே ஷ்யாம் படத்தில் பிரபாசிற்கு ஜோடியாக முகமூடி படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை ராதாகிருஷ்ண குமார் எழுதி, இயக்குகிறார். யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் காதல் படமான இதற்கு பாடலும், வசனமும் எழுதுவதில் மகிழ்ச்சி என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது. தமிழுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க உள்ளார். இப்படத்தில் கிருஷ்ணம் ராஜூ, சச்சின் கேதேகர், பிரியதர்ஷினி புலிகொண்டா, பாக்கியஸ்ரீ, முரளி சர்மா, குணால் ராய் கபூர், சத்யன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் எழுத உள்ளதை. வெல்கம் சார் எனக் குறிப்பிட்டு, ட்விட்டரில் வாழ்த்தி உள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.
காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டீசரில் கூட்டம் நிறைந்த ரயில்வே ஸ்டேஷனில் தனது காதலியுடன் ரயிலில் இருந்து இறங்கி, நடக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.