Madharaasi Box Office: 250 கோடி வசூல் செய்த கல்யாணி பிரியதர்ஷனின் லோகா.. 100 கோடி வசூலுக்கு போராடும் மதராஸி!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடித்த மதராஸி படத்தின் உலகளவிலான வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் வாரம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய மதராஸி திரைபப்டம் 2வது வாரத்தில் அப்படியே வசூலில் பலத்த அடியை சந்தித்தது. இத்தனைக்கும் படத்துக்கு நல்ல வரவேற்பு மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்கின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் சிக்கந்தர் படங்களை விட மதராஸி படம் சூப்பராகவே இருந்தது என பலரும் பாராட்ட கம்பேக் கொடுத்த சந்தோஷத்தில் முருகன் கோயிலுக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்டார்.

ஆனால், சிவகார்த்திகேயன் தான் சந்தோஷமாகவே இல்லை என்றும் எதிர்பார்த்த வசூல் வேட்டையை மதராஸி படம் பெறாததற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருப்பதாக பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் படக்குழுவினரிடையே வெடித்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் சேர்ந்து நடித்த நிலையில், இந்த கம்பேரிசன் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பரவி வருகின்றன.
250 கோடி வசூல்: நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம் 7 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் ஈட்டியது. மலையாள திரையுலகிலேயே அதிக வசூல் வேட்டை நடத்திய 2வது படமாக லோகா உள்ளது. அடுத்த வாரமும் படம் ஓடினால் எம்புரான் வசூலையும் மிஞ்சும் என்கின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் வசூலை முந்தி 252 கோடி ரூபாய் வசூலை லோகா இதுவரை ஈட்டியுள்ளது. 268 கோடி வசூலுடன் எம்புரான் முதலிடத்தில் உள்ளது.

மதராஸி 90 கோடி வசூல்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜமால், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மதராஸி திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக உலகளவில் 91 கோடி வசூலை ஈட்டியுள்ளது. 2 நாட்களிலேயே 50 கோடி வசூலை படம் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 100 கோடி வசூலை 2 வாரங்கள் ஆகியும் படம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இன்னும் 9 கோடி வசூல் ஈட்டினால் மட்டுமே 100 கோடி கிளப்பில் இந்த படம் இணையும் என்கின்றனர். ஆனாலும், மாவீரன், அயலான் படங்களை விட இந்த படத்தின் வசூல் அதிகம் என்பது ஆறுதல் தான். 150 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிதாக லாபத்தை தியேட்டர் ரிலீஸ் கொடுக்காது என்றும் ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை மற்றும் ஆடியோ உரிமை உள்ளிட்டவை சேர்ந்து போதிய லாபம் கிடைக்கும் என்கின்றனர்.
பராசக்தி வசூல் எப்படி இருக்கும்?: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி பராசக்தி படம் வெளியாகவுள்ள நிலையில், கண்டிப்பாக அந்த படம் அமரன் படத்தின் வசூலை முந்தும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், விஜய்யின் ஜன நாயகன், பிரபாஸின் ராஜாசாப் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், பராசக்தி படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். கூலி படத்துக்குப் பிறகு மதராஸி வெளியானது தான் இந்தளவுக்கு வசூல் குறைய காரணம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











