Madharaasi X Review: மதராஸி ட்விட்டர் விமர்சனம்.. வெயிட்டான சம்பவத்தை பார்த்துவிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன் மற்றும் வித்யூத் ஜமால் நடிப்பில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் அமெரிக்கா, இலங்கை மற்றும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிகாலை 6 மணிக்கே முதல் காட்சி வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்களை தொடர்ந்து அதிகாலையிலேயே டிஜே எல்லாம் வைத்து தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். படம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்தே எக்ஸ் தளத்தில் விமர்சனங்களை சிவகார்த்திகேயன் ரசிகர்களும் படத்தை பார்க்காமலே ஹேட்டர்களும் போடத் தொடங்கி விட்டனர்.

ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கியிருந்தார். இந்த வருடம் பாலிவுட்டில் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்கி இருந்தார். தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து கம்பேக் கொடுத்தாரா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
மதராஸி ரிலீஸ் ஆகிடுச்சு: சில முன்னணி நடிகர்கள் படங்களே காலையில் ரிலீஸ் ஆகுமோ ஆகாதோ என்கிற பதற்றம் கடைசி வரை இருக்கும். ஆசிரியர் தினம், ஓணம் பண்டிகை மற்றும் மிலாடி நபி என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகைகள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அதிகாலை 6 மணிக்கே சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் FDFS பல இடங்களில் தொடங்கி விட்டன. அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை சிவகார்த்திகேயன் தருவார் என்றே ரசிகர்கள் நம்பி தியேட்டர்களில் படையெடுத்து வருகின்றனர்.
டைட்டில் கார்டே தெறிக்குது: அனிருத் ஆரம்பத்திலேயே சிவகார்த்திகேயன் டைட்டில் கார்டுக்காக போட்டுள்ள பிஜிஎம்மே தெறிக்குது என ரசிகர்கள் மதராஸி படத்தின் டைட்டில் கார்டு வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். துப்பாக்கி, கத்தி என ஏ.ஆர். முருகதாஸ் தனது படங்களின் டைட்டில் கார்டையே பார்த்து பார்த்து செதுக்குவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
துப்பாக்கி சம்பவம் லோடிங்: விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி 2 பண்ண வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தது நிறைவேறவில்லை. ஷாருக்கானுக்காக எழுதிய கதை தான் மதராஸி என்றும் ஏ.ஆர். முருகதாஸ் சொல்லியிருந்தார். கடந்த ஆண்டு இதே நாளில் தான் விஜய் கோட் படத்தில் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்தார். இந்நிலையில், மதராஸி படத்தில் துப்பாக்கியுடன் சிவகார்த்திகேயன் போடும் சண்டை காட்சி சம்பவம் லோடிங் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரொம்ப கிரிஞ்சா இருக்கு: சூர்யா ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் வரை சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்கு அதிகாலையில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்களை பதிவிட தொடங்கி விட்டனர். மதராஸி படத்தில் ஹீரோ இன்ட்ரோவே க்ரிஞ்சா இருக்கு என்றும் முதல் அரை மணி நேரமே ரொம்ப போர் அடிக்குது, படம் தேறாது என சூர்யா ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வித்யூத் ஜமால் இன்ட்ரோவே தெறிக்குது: வித்யூத் ஜமால் அறிமுக காட்சியே அனல் பறக்கிறது. டோல்கேட்டில் நடக்கும் சண்டை அட்டகாசம். பிஜிஎம், சினிமேட்டோகிராஃபி என ஏ.ஆர். முருகதாஸ் பவர்ஃபுல் வில்லனை வழக்கம் போல காட்சிப்படுத்தியுள்ளார் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











