twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பஞ்சாங்க சர்ச்சை.. அறியாமையை உணர்கிறேன்.. விளக்கமளித்த நடிகர் மாதவன்!

    |

    சென்னை : சமூகவலைத்தள பக்கத்தில் எழுந்து வரும் விமர்சனங்களுக்கு எல்லாம் நான் தகுதியானவன் தான், எனது அறியாமையை உணர்கிறேன் என நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மாதவனின் இயக்கத்தில் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மாரிசெல்வராஜ்… பரியேறும் பெருமாள் நடிகர் உருக்கம் !கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மாரிசெல்வராஜ்… பரியேறும் பெருமாள் நடிகர் உருக்கம் !

    வாழ்க்கை வரலாறு

    வாழ்க்கை வரலாறு

    இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகினார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் ஜூலை 1ந் தேதி வெளியாக உள்ளது.

    பஞ்சாங்கத்தின் மூலம்

    பஞ்சாங்கத்தின் மூலம்

    'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய மாதவன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32,33 முறை செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றன. இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள் என்றார்.

    மிஸ்டர் மாதவன் என்ன இதெல்லாம்

    மிஸ்டர் மாதவன் என்ன இதெல்லாம்

    மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரால் பலரும் ஆள் பார்க்க மட்டும் தான் க்யூட் போன்று. வாயை திறந்தால் தான் உண்மை தெரிகிறது. பஞ்சாங்கத்திற்கும், மார்ஸ் மிஷனுக்கும் சம்பந்தம் இல்லை மிஸ்டர் மாதவன், பஞ்சாங்கத்தை சொல்லி விஞ்ஞானிகளின் உழைப்பை குறைத்துவிட்டீர்களே என அவரை கண்டபடி திட்டத்தொடங்கிவிட்டனர்.

    எனது அறியாமையை உணர்கிறேன்

    எனது அறியாமையை உணர்கிறேன்

    இணையத்தில் விமர்சனங்கள் கண்டபடி பரவியதை அடுத்து, மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம்" என்று அழைத்தேன். இந்த விமர்சனங்களுக்கு நான் தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன். அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்." என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    R Madhavan recently found himself at the centre of a social media storm for his statement about ISRO scientists using Panchang. However, the was quick enough to accept his error and issued a clarification on Twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X