17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ
சென்னை: 17 ஆண்டுகள் கழித்து மாதவனும், சிம்ரனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் மூலம் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அந்த படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
வயதான நம்பி நாராயணன் கெட்டப்புக்கு மாதவன் மாறியபோது எது நம்பி, எது நம்ம மேடி என்பதே தெரியாத அளவுக்கு இருந்தது. அந்த அளவுக்கு மாதவன் ஆளே மாறிவிட்டார். மாதவனின் உழைப்பாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிம்ரன்
ராக்கெட்ரி படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்துள்ளார் சிம்ரன். 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிம்ரனுடன் சேர்ந்து நடித்தபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மாதவன். அந்த புகைப்படத்தை பார்த்தால் 17 ஆண்டுகள் சென்றது போன்றே இல்லை. இருவரும் பழையபடியே உள்ளனர்.

கன்னத்தில் முத்தமிட்டால்
மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் திரு, இந்திரா தம்பதியாக நடித்திருந்தார்கள் மாதவனும், சிம்ரனும். அதன் பிறகு தற்போது மீண்டும் கணவன், மனைவியாக நடித்துள்ளார். முன்னதாக பார்த்தாலே பரவசம் படத்திலும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். வெற்றி ஜோடி மீண்டும் சேர்ந்து நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பாராட்டு
மாதவனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த மகிழ்ச்சியை ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் சிம்ரன். அதை பார்த்த மாதவன் பதிலுக்கு சிம்ரனை பாராட்டியுள்ளார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புகழ்வதை பார்த்த ரசிகர்களோ ஐ ஆம் வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம்
திருமணம், குழந்தைகள் என்றான பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு இதுவரை பிரேக் கொடுக்கும் படம் எதுவும் அமையவில்லை. பேட்ட படத்தில் சிம்ரன் அனைவராலும் கவனிக்கப்பட்டார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் மாதவனின் இயக்கத்தில் ராக்கெட்ரி படத்தில் நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு பிரேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்ரனின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமையாதா என்று அவரின் ரசிகர்கள் தான் அதிகம் கவலைப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











