லாக்டவுனுக்கு பிறகு.. ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையை தொடங்கிய மாதவன்!

By

சென்னை: தான் தயாரித்து இயக்கி, நடிக்கும் ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையை நடிகர் மாதவன் தொடங்கியுள்ளார்.

பிரபல நடிகர் மாதவன், தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்ட் கட்டி நடிப்பவர். மும்பையில் வசித்து வரும் அவர், இப்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ளார்.

அனுஷ்கா, அஞ்சலி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியான நேரத்தில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட்

ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட்

இதனால் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையான 'ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட்' படத்தைத் தயாரித்து இயக்கி, நடித்து வருகிறார். நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டு உருவாகும் இந்தப் படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குவதாகவும் மாதவன் நடிப்பதாகவும் முதலில் தகவல் வெளியானது.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

இந்நிலையில், ஆனந்த் மகாதேவன் விலகியதைத் தொடர்ந்து படத்தை மாதவனே இயக்கி வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் இத்திரைப்படம் உருவாகிறது. இதில் சிம்ரன், ரவி ராகவேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தி பதிப்புக்காக ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் ரோலில் அவர் நடிக்கிறார்.

கொரோனா காரணமாக

கொரோனா காரணமாக

தமிழ்ப் பதிப்புக்கு சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வந்தது. டிஐ மற்றும் ஃபைனல் மிக்சிங் பாக்கி இருந்த நிலையில், கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால், மற்ற இயக்குனர்களை போல, படத்தின் வேலைகளை தொடங்காமல் இருந்தார் மாதவன்.

Recommended Video

Madhavan's 50th Birthday Celebration • Live • Maddy
நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

இந்நிலையில், இப்போது பட வேலைகளை தொடங்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு படத்தின் வேலையை தொடங்கி உள்ளேன் என்று தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளார் அவர். இந்த படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்பட வெளிநாடுகளிலும் நடந்துள்ளது.

More from Filmibeat

Read more about: madhavan மாதவன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X