பாகமதி ஹிந்தி ரீமேக்கில் நான் நடிக்கல.. அசால்ட்டா அசிங்கப்படுத்திய மாதவன்!

Recommended Video

Madhavan slams on Fake news | Nishabdham| R Madhavan | Anushka Shetty

மும்பை: அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான பாகமதி படத்தை ஹிந்தியில் அக்‌ஷய் குமார் தயாரிக்கவுள்ளதாகவும், அதில், நடிகர் மாதவன் மற்றும் புமி பெட்னேகர் நடிக்கவிருப்பதாகவும், பிரேக்கிங் போட்டு பாலிவுட்டில் வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் மாதவன் மறுத்துள்ளார்.

அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் நிசப்தம் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பாகமதி ஹிந்தி ரீமேக்கில் நடிப்பார் என்ற செய்தி பாலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வதந்திகளுக்கு தற்போது நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாகமதி

பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான படம் பாகமதி. டோலிவுட் இயக்குநர் அஷோக் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான இந்த ஹாரர் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அளவுக்கு தமிழில் வெற்றி பெறவில்லை.

என்ன ரோலா இருக்கும்?

என்ன ரோலா இருக்கும்?

ஒருவேளை ஹிந்தியில் பாகமதி படம் ரீமேக் ஆனால், அதில், ஜெயராம் நடித்த ரோலில் மாதவன் நடிப்பார் என வதந்திகள் பரவின. ஆனால், இனிமேல் அதற்கு வாய்ப்பில்லாமல் ஒரே ட்வீட்டில் அந்த செய்திகள் வதந்திகள் என அசால்ட்டாக அசிங்கப்படுத்திவிட்டார் மாதவன்.

நிசப்தம்

நிசப்தம்

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் ஐந்து மொழிகளில் நிசப்தம் படம் உருவாகியுள்ளது. அனுஷ்கா லீடு ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் மாதவன், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான நிசப்தம் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐ லவ் யுவர் ஸ்டைல்

பாகமதி ஹிந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்றும் அதுகுறித்து வந்த செய்தியில் உண்மையில்லை என்றும் கூறிய நடிகர் மாதவனை, அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஃபேக் செய்திகளுக்கு எதிராக நேரடியாக ரசிகர்களுக்கு நிஜ அப்டேட் தரும் உங்க ஸ்டைலை விரும்புகிறேன் என ஒரு ரசிகை மாதவனுக்கு கொக்கிப் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X