புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் மாதவன்..? ட்விட்டால் ரசிகர்கள் ஷாக்!

சென்னை : மாதவன், அனுஷ்கா ஷெட்டி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் "நிசப்தம்" திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

இதற்கிடையில் இவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான "மாறா" திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது என சில தகவல்கள் கசிந்துள்ளது.

கொரானா பிரச்சினை முடிந்த உடன் தான் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் மாதவன் இப்பொழுது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் புஷ்பா படத்தில் நடிப்பது பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹிந்தியிலும் ரீமேக்

ஹிந்தியிலும் ரீமேக்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த "அலா வைகுண்டபுரம்லோ " திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது.

புஷ்பா

புஷ்பா

தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள அல்லு அர்ஜுன் இப்பொழுது "ரங்கஸ்தலம்" இப்படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமார் உடன் இணைந்து "புஷ்பா" என்ற திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மாதவன் தெளிவுபடுத்தியுள்ளார்

மாதவன் தெளிவுபடுத்தியுள்ளார்

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ் என பிரபலமான நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்பொழுது இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது பற்றி நடிகர் மாதவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

ராகெட்டரி : தி நம்பி எபெக்ட்

ராகெட்டரி : தி நம்பி எபெக்ட்

இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என தொடர் வெற்றி திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி வரும் மாதவன் இப்பொழுது தனது சொந்த தயாரிப்பில் இயக்கி நடித்து வரும் "ராகெட்டரி : தி நம்பி எபெக்ட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் கொரானாவின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகிறது

ஓடிடியில் வெளியாகிறது

கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்ரனுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்து வரும் மாதவன் இப்பொழுது நடித்துள்ள த்ரில்லர் திரைப்படமான "நிசப்தம் " வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

ட்விட்டர் பக்கத்தில்

ட்விட்டர் பக்கத்தில்

இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தில் மாதவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியான நிலையில் அதைப்பற்றி தெளிவுபடுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தான் நடிக்க வில்லை

தான் நடிக்க வில்லை

அதில் தான் புஷ்பா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் மட்டும் அல்ல எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க வில்லை எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் அதே சமயம் பரப்ப வேண்டாம் எனவும் ரசிகர்கள் உட்பட பலருக்கும் தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Recommended Video

வயசாகியும் சில HEROES ROMANCE ...அருவருப்பா இருக்கு | CLOSE CALL WITH MADHAVAN | FILMIBEAT TAMIL
ஏமாற்றத்தில்

ஏமாற்றத்தில்

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக மாதவன் நடிக்கிறார் என்ற செய்தியை நம்பிய இவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அதை மறுத்திருக்கும் மாதவனின் இந்த ட்விட் பதிவு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X