twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமி சிலையுடன் சிலுவையா?: விமர்சித்தவர்களுக்கு மாதவன் நெத்தியடி

    By Siva
    |

    சென்னை: தான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விமர்சித்தவர்களுக்கு மாதவன் தக்க பதில் அளித்துள்ளார்.

    ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் வாழ்த்து தெரிவித்து மாதவன் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். மாதவன், அவர் அப்பா, மகன் வேதாந்த் ஆகியோர் புது பூணூல் போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தனர்.

    Madhavan gives a befitting reply to trolls

    அந்த புகைப்படத்தில் பூஜை அறையில் சாமி சிலைக்கு அருகே சிலுவை இருப்பதை பார்த்தவர்கள் மாதவனை விமர்சித்தனர். தேவாலயங்களில் இந்து கடவுள்களை பார்த்தது உண்டா என்று ஒருவர் மாதவனிடம் கேட்டார். அதை பார்த்த மாதவன் தக்க பதில் அளித்துள்ளார்.

    உங்களை போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அங்கு உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது. தர்காக்களில் இருந்து ஆசி பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஆசி பெற்றுள்ளேன். சில பரிசாக வந்தது, சில வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது.

    எங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும் எங்களுக்கு பிபி கஸ்தூரி வேண்டாம், 'டி. கஸ்தூரி' தான் வேண்டும்

    என் அடையாளத்தை பெருமையுடன் தக்க வைக்க வேண்டும் என்றும் அதே சமயம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர். எம்மதமும் சம்மதம். என் மகனும் இதையே பின்பற்றுவார் என்று நம்புகிறேன். கோவில் இல்லாத இடங்களில் தர்கா, குருத்வாரா, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளேன். நான் இந்து என்பது தெரிந்து அவர்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தினார்கள். அதற்கு நான் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டாமா என்று கேட்டுள்ளார்.

    சிலுவை மட்டும் அல்ல ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவிக்க பூணூல் போட்ட புகைப்படம் எதற்கு என்றும் சமூக வலைதளங்களில் மாதவனை விமர்சித்தார்கள். இந்நிலையில் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Madhavan has given a befitting reply to a troll who criticised him for keeping a cross with the statues of Hindu Gods.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X