twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தன்னை கலாய்த்த என்.ஆர்.ஐ.-க்கு நெத்தியடி கொடுத்த மாதவன்

    By Siva
    |

    சென்னை: தன்னை கலாய்த்த வெளிநாடு வாழ் இந்தியருக்கு நடிகர் மாதவன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    நடிகர் மாதவன் மதுரை கோவில் திருவிழா வீடியோ ஒன்றை ட்விட்டரில் பார்த்துள்ளார். அந்த வீடியோவில் கோவில் திருவிழா ஊர்வலத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு போலீசார் மக்களை வழிவிடச் செய்தனர்.

    ஆம்புலன்ஸ் நல்லபடியாக கிளம்பிச் சென்றது இதை பார்த்த மாதவன் ட்வீட் செய்தார்.

    விறுவிறுப்பாக ஓடிய மலையாளப் படம்.. பற்றிக் கொண்ட தீ.. தெறித்து ஓடிய ரசிகர்கள்! விறுவிறுப்பாக ஓடிய மலையாளப் படம்.. பற்றிக் கொண்ட தீ.. தெறித்து ஓடிய ரசிகர்கள்!

    மாதவன்

    ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட மக்கள் அடங்கிய வீடியோவை பார்த்த மாதவன் இந்தியா ஒளிர்கிறது என்று ட்வீட் போட்டார். அதை பார்த்த பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அருமையான வீடியோ என்று கமெண்ட் செய்தார்.

    விளாசல்

    மாதவனின் ட்வீட்டை பார்த்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் பொதுமக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் இப்படி திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்வதை பார்த்தால் நாம் 2019ம் ஆண்டில் அல்ல மாறாக 1959ம் ஆண்டில் தான் உள்ளோம் என்பது தெரிகிறது. வெளிநாட்டில் வாழும் பணக்காரர்கள் இதை பாராட்டுவதா? என்ன ஒரு ஜோக் என்று விளாசினார்.

    புரியாது

    வெளிநாடு வாழ் இந்தியரின் கமெண்ட்டுக்கு மாதவன் கூறியிருப்பதாவது, இந்த வீடியோவில் இருக்கும் நல்லது, எங்கள் மக்களின் சிறப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் உங்களுக்கு புரியாது. உங்களின் ட்வீட்டுகள் எதுவுமே பாசிட்டிவாக இல்லை. அதனால் உங்களுக்கு விளக்கி பலன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    எதிர்ப்பு

    மாதவன் அந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கு அளித்த பதிலை பார்த்து சிலர் பாராட்டியுள்ளனர். சிலரோ, ஆம்புலன்ஸ் போக வழியில்லாமல் அப்படி என்ன கொண்டாட்டம் என்று கேட்டுள்ளனர்.

    English summary
    Actor cum director Madhavan has given a befitting reply to a NRI who criticised him for praising a video taken during temple festival in Madurai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X