twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராக்கெட்ரி மூலம் இயக்குனர் அவதாரம்: டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் மாதவன்

    By Siva
    |

    சென்னை: ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார் நடிகர் மாதவன்.

    சாக்லேட் பாயாக இருந்த மாதவன் இயக்குனர் ஆனந்த் மகாதேவனுடன் சேர்ந்து விஞ்ஞானி எஸ். நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வந்தார். ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் இணை இயக்குனர் ஆனந்த் மகாதேவன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

    மாதவன்

    மாதவன்

    ஆனந்த் மகாதேவன் மிகவும் திறமையான இயக்குனர். ஆனால் தவிர்க்க முடியாத சூழல்களால் அவரால் ராக்கெட்ரி படத்தை தொடர்ந்து இயக்க முடியவில்லை. பல காரணங்களால் இந்த படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. நம்பி நாராயணனின் கதையை உலகிற்கு சொல்ல காத்திருக்கிறேன் என்று மாதவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    டென்ஷன்

    டென்ஷன்

    ஆனந்த் மகாதேவன் வெளியேறியதால் தற்போது ராக்கெட்ரி படத்தை இயக்கும் முழுப் பொறுப்பும் மாதவனிடம் வந்துள்ளது. முதன்முதலாக ஒரு படத்தை இயக்கி நடிப்பதால் டென்ஷன் கலந்த மகிழ்ச்சியில் உள்ளார் மாதவன். ரசிகர்களின் வாழ்த்துக்களும், ஆதரவும் தேவை என்று கேட்டுள்ளார்.

    ஹீரோ

    ஹீரோ

    ஒரு நடிகராக ஜெயித்த உங்களால் இயக்குனராகவும் சாதிக்க முடியும். தைரியமாக படத்தை எடுங்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை ஊட்டியுள்ளனர். ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

    வெளிநாடு

    வெளிநாடு

    ராக்கெட்ரி படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், பிரின்ஸ்டன் மற்றும் ரஷ்யாவில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Actor R. Madhavan has taken director avatar through Rocketry - The Nambi Effect after co-director Ananth Mahadevan left the movie due to unavoidable circumstances.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X