கதை பிடிக்காமல் மாதவன் இந்தக் கதையை ரிஜெக்ட் செய்தாரா.. சூர்யாவின் மாஸ் என்டர்டெயினர்!
சென்னை : நடிகர் மாதவன் சிறப்பான பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
Recommended Video
சமீபத்தில் அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் ராக்கெட்ரி என்ற படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவும் முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் இந்திய அளவில் கோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தில் அவர் மிரட்டியிருந்தார். தொடர்ந்து தற்போது ராக்கெட்ரி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ராக்கெட்ரி படம்
இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ள மாதவன், படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாகவே மாறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் மாதவனை பார்க்க முடியவில்லை. இளவயது கேரக்டரிலும் நம்பி நாராயணனையே பார்க்க முடிந்தது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறப்பான இயக்கம்
இந்தப் படத்தில் ஒரு சிறப்பான விஞ்ஞானி எப்படி தேசத் துரோக வழக்கில் சிக்கி 30 ஆண்டுகால நீதிமன்ற போராட்டத்தை சந்தித்தார் என்பதை எந்தவிதமான கமர்ஷியல் சமரசமும் இல்லாமல் இயக்கியுள்ளார் மாதவன். இதன்மூலம் தான் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கத்திலும் தேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

கேமியோ ரோலில் சூர்யா
இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவும் சிறப்பான கேமியோ ரோலில் நடித்துள்ளார். நம்பி நாராயணனை பேட்டியெடுக்கும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். தற்போது இந்தப் படத்தையொட்டி மாதவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக சூர்யாவிடம் உரையாடல் மேற்கொண்டார். இதன்போது பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

கஜினி படத்தை நிராகரித்த மாதவன்
அப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான கஜினி படத்தின் கதையை முதலில் டைரக்டர் தன்னிடம்தான் கூறியதாகவும் அந்தப் படத்தின் இரண்டாவது பாதி பிடிக்காததால் தான் அந்த கதையை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சூர்யாவை பார்த்து வியப்பு
தொடர்ந்து அந்தப் படத்தில் கமிட்டான சூர்யா, தன்னை வருத்திக்கொண்டு நடித்ததை பார்த்து தான் வியப்படைந்ததாகவும் அவர் இந்த உரையாடலின்போது தெரிவித்துள்ளார். சூர்யாவின் கேரியர் பெஸ்ட் படங்களில் கஜினியும் ஒன்று. இதில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி கேரக்டரில் நடித்து பெரிய ஹிட்டை கொடுத்திருந்தார் சூர்யா.

உளவியல் ரீதியான பிரச்சினை
உளவியல் ரீதியான பிரச்சினையையும் அதுசார்ந்த நிகழ்வுகளையும், அந்த பிரச்சினையை வைத்துக் கொண்டே எதிரிகளை பழிவாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளைஞனை அப்படியே வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா. இந்தப் படத்தில் அசின் மற்றும் நயன்தாரா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











