பொங்கல் வெளியீடாக ரிலீசாகும் மாதவனின் மாறா.. ஆனால், தியேட்டரில் இல்லை அமேசான் பிரைமில்!

சென்னை: நடிகர் மாதவனின் மாறா படம் அமேசான் பிரைமில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.

அந்த படத்தைத் தொடர்ந்து மாதவனின் அடுத்த படமும் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான் படம்

துல்கர் சல்மான் படம்

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான மலையாள படமான சார்லி படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் திலீப் குமார். துல்கர் சல்மான் நடித்த சார்லி ரோலில் தமிழில் நடிகர் மாதவன் மாறா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறா பொங்கல்

மாறா பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதவனின் மாறா திரைப்படம் வரும் ஜனவரி 8ம் தேதி உலகம் முழுவதிலும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேடிசன் நடிப்பில் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கிய சைலன்ஸ் திரைப்படம் அமேசான் பிரைமில் இந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், மாதவனின் அடுத்த படமான மாறா திரைப்படத்தையும் அமேசான் பிரைமுக்கே படக்குழுவினர் விற்றுள்ளனர்.

தியேட்டர் ரிலீஸ்

தியேட்டர் ரிலீஸ்

மாறா திரைப்படம் தியேட்டரில் வெளியான பிறகு தான் அமேசான் பிரைமில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரடியாக அமேசான் ஒரிஜினல் மூவியாகவே மாறா வெளியாக உள்ளது. சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மாதவன் இந்த படத்தை ரொம்பவே நம்பியுள்ளார்.

Recommended Video

வயசாகியும் சில HEROES ROMANCE ...அருவருப்பா இருக்கு | CLOSE CALL WITH MADHAVAN | FILMIBEAT TAMIL
’விக்ரம் வேதா’ யாஞ்சி

’விக்ரம் வேதா’ யாஞ்சி

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில், மீண்டும் இந்த ஜோடி கம்பேக் ஆகிறது. இந்த படத்தின் உரிமையை அமேசான் பிரைம் அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X