twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாராட்டுக்களை பெற்றாலும்.. பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டலையே.. ராக்கெட்ரி முதல் நாள் வசூல் எவ்வளவு?

    |

    சென்னை: பான் இந்தியா படமாக வெளியான மாதவனின் ராக்கெட்ரி படத்தை பார்த்த பலரும் நம்பி நாராயணன் பயோபிக் பார்க்க வேண்டிய படம் என பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து பாராட்டினார்கள்.

    ஆனால், படத்தை பார்க்க தியேட்டருக்கு மக்கள் கூட்டம் படையெடுத்து வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாக மாறி உள்ளது.

    பல புரமோஷன் வேலைகளை மாதவன் செய்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அது ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் ஆகவில்லை என்கின்றனர்.

    விஜய்யின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், பான் இந்தியா இயக்குநர்..சகலகலா வித்தகர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், பான் இந்தியா இயக்குநர்..சகலகலா வித்தகர் எஸ்.ஏ.சந்திரசேகர்

    யூடியூப்களில் பேட்டி

    யூடியூப்களில் பேட்டி

    மாதவனின் ராக்கெட்ரி படத்தை பார்த்து விட்டு அதன் பிறகு யார் இந்த நம்பி நாராயணன் என ரசிகர்கள் தேடும் போது அவரது பேட்டிகள் யூடியூப்களில் வெளியாகி இருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், அதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட பேட்டிகளை நம்பி நாராயணன் கொடுத்து தள்ளி விட்டார். மாதவனின் பஞ்சாங்க சர்ச்சையும் படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியாக மாறாமல் போய் விட்டது. ராக்கெட் சயின்ஸ் காட்சிகள் சாமானிய ரசிகர்களை வெகுவாக ஈர்க்காததே இந்த படத்திற்கு டல் ஓப்பனிங் அமைய காரணமாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் எவ்வளவு

    தமிழ்நாட்டில் எவ்வளவு

    மாதவனின் ராக்கெட்ரி படம் தமிழ் நாட்டில் முதல் நாளில் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யாவின் கேமியோ ரோல் தான் இந்த வசூலுக்கும் காரணம் என்கின்றனர். இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மாதவன் நடித்த எந்த படமும் ஓடாத நிலையில், இந்தளவுக்கு இங்கே வசூல் வந்ததற்கு காரணமே அவர்கள் செய்த புரமோஷன் தான் என்கின்றனர்.

    ஷாருக்கான் கேமியோ செய்தும்

    ஷாருக்கான் கேமியோ செய்தும்

    இந்தியில் சூர்யாவுக்கு பதிலாக ஷாருக்கான் கேமியோ செய்தும் ரசிகர்கள் படத்தை பார்க்க வரவே இல்லை. 2018ல் வெளியான ஜீரோ படத்திற்கு பிறகு பெரிய திரையில் ஷாருக்கான் இந்த படத்தின் மூலமாகத்தான் தலையே காட்டி உள்ளார் என்பது தனிக் கதை. லீடு ரோலில் மாதவன் நடித்த நிலையில், அவருக்கு அதிகமாக ஃபேன் பேஸ் இல்லாதது தான் பாலிவுட்டில் வெறும் 50 லட்சம் மட்டுமே முதல் நாளில் வசூல் செய்ய காரணம் என்கின்றனர்.

    ராக்கெட்ரி பட்ஜெட்

    ராக்கெட்ரி பட்ஜெட்

    பிரான்ஸ், ரஷ்யா என பல நாடுகளுக்கு லைவாக சென்று படத்தை இயக்கி இருக்கிறார் நடிகர் மாதவன். ராக்கெட்ரி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும், பெரிய ஓப்பனிங் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 40 முதல் 45 கோடி தான் என்கின்றனர். டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனைகளால் அந்த தொகை கிடைத்தால் தான் மாதவனுக்கு குறைந்தபட்ச லாபம் கிடைக்கும். முதல் நாளில் உலகளவில் மொத்தமாக 4 கோடிக்கும் குறைவாகவே தான் இந்த படம் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.

    Recommended Video

    Rocketry Public Review | Madhavan | Suriya | ராக்கெட்ரி Review | *Review
    மக்கள் வருவார்களா

    மக்கள் வருவார்களா

    ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2, விக்ரம் உள்ளிட்ட ஆக்‌ஷன் படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்றனர். ஆனால், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை பார்க்க அதே ஆர்வத்தை ரசிகர்கள் காட்டுவார்களா? என்பது சந்தேகம் தான். 83 படம் கூட பார்க்க நன்றாகத்தான் இருந்தது ஆனால், பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது. அதே நிலைமை இந்த படத்திற்கு வருமா? அல்லது பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வசூல் அதிகரிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Madhavan's Rocketry: The Nambi Effect Day 1 Box Office Collection is very very dull. But the Makers hope it will slowly rise up at the box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X