twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பார்லிமென்ட்டில் திரையிடப்பட்ட மாதவனின் ராக்கெட்ரி...எம்பி-க்கள் என்ன சொன்னாங்க?

    |

    புதுடில்லி : நடிகர் மாதவன் நடித்த ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படம் ஜுலை 1 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் மூலம் மாதவன் டைரக்டராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.

    தியேட்டர்களில் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ராக்கெட்ரி படம், நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இந்த படம் சமீபத்தில் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக்காக எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் தமிழ் வெர்சனில் சூர்யாவும், இந்தி வெர்சனில் ஷாருக்கானும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

    ஓடிடியில் வெளியாகும் மாதவனின் ராக்கெட்ரி...எப்போ தெரியுமா?ஓடிடியில் வெளியாகும் மாதவனின் ராக்கெட்ரி...எப்போ தெரியுமா?

    பார்லிமென்ட்டில் ராக்கெட்ரி

    பார்லிமென்ட்டில் ராக்கெட்ரி

    தற்போது ராக்கெட்ரி படம், இந்திய அரசியல் தலைவர்களுக்காக பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அரங்கில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மாதவன், நம்பி நாராயணன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இதன் போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு, வைரலாக்கப்பட்டது.

    எம்பி.,க்கள் கொடுத்த ரெவ்யூ

    எம்பி.,க்கள் கொடுத்த ரெவ்யூ

    ராக்கெட்ரி படத்தை பார்த்து விட்டு எம்.பி.,க்கள், மாதவனை பாராட்டி உள்ளனர்.நல்ல படம் என்று ரெவ்யூ கொடுத்ததுடன், Godfather படத்துடன் ஒப்பிட்டு பலரும் பேசி உள்ளனர். இதுவரை எந்த படத்திற்கும் தராத அளவிற்கு அதிகபட்ச ரேட்டிங்கை ராக்கெட்ரி படத்திற்கு அவர்கள் கொடுத்துள்ளனர்.

    மாதவனுக்கு பாராட்டு

    மாதவனுக்கு பாராட்டு

    படம் முடிந்ததும் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி உள்ளனர். பட ரிலீசுக்கு முன்பும் பிரதமர் நரேந்திர மோடியும் மாதவன் மற்றும் நம்பி நாராயணனை அழைத்து பாராட்டி, பேசி இருந்தார். இந்த போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் பரவி பரபரப்பானது.

    இது தான் படத்தின் கதை

    இது தான் படத்தின் கதை

    இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த போது நம்பி நாராயணன் இந்திய ஆய்வு ரகசியங்களை உளவு பார்த்து வெளிநாடுகளுக்கு சொன்னதாக குற்றம்சாட்டப்பட்டார். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார். இந்த நிகழ்வுகளை மையப்படுத்தி தான் ராக்கெட்ரி படம் எடுக்கப்பட்டிருந்தது.

    English summary
    Now, in a private screening, national political leaders watch the film at the Parliament. The political leaders all reportedly lauded Madhavan and stated that the film was good and compared it to the film ‘Godfather’
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X