நம்பி நாராயணனின் பயோபிக்… ‘ராக்கெட்ரி‘ ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார்.

இப்படத்திற்கு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை மாதவன் அறிவித்துள்ளார்.

இப்படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாள, கன்னடம் என 6 மொகிகளில் தயாராகி வருகிறது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது, நம்பி நாராயணன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இவருடைய சாதனையை நீங்க பார்த்தீங்கன்னா உங்களால அவரைபற்றி பேசாம இருக்க முடியாது. ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் பத்தி தெரிஞ்சுக்காம இருக்குறவங்க தெரிஞ்சுக்குவாங்க.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

இப்படத்திற்கு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என மாதவன் அறிவித்துள்ளார். இவர் இநத படத்தை இயக்கி நடிப்பதோடு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இதனை அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பற்றிய வேறு தகவல்களும் வெளிவராத நிலையில் இது, இஸ்ரோ விஞ்ஞானியின் கதை என்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிரபராதி

நிரபராதி

கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X