லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிறது ரன் 2... மாதவன் நடிப்பாரா?

சென்னை : லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ல் வெளியான படம் ரன். அதுவரை சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோ லிஸ்டில் சேர்த்தது இந்தப் படம். இந்தப் படத்தில் அழகான மீரா ஜாஸ்மின் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் சிறப்பான வசூலை பெற்றது.

ரன் படம்

ரன் படம்

நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின் ஜோடி சேர்ந்து நடித்திருந்த படம் ரன். கடந்த 2002ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் லிங்குசாமி. ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் விவேக், ரகுவரன், அனுஹாசன், அதுல் குல்கர்னி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

 ஆக்ஷன் அவதாரத்தில் மாதவன்

ஆக்ஷன் அவதாரத்தில் மாதவன்

படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலையடுத்து படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுவரை சாக்லேட் பாய் இமேஜில் வலம்வந்த நடிகர் மாதவனுக்கு ஆக்ஷன் அவதாரத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது. காதல் படம்தான் என்றாலும் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் ஏராளமாக இருந்தது.

சிறப்பான ஷட்டர் காட்சி

சிறப்பான ஷட்டர் காட்சி

குறிப்பாக படத்தின் ஷட்டர் காட்சி ரசிகர்களின் மிகுந்த விருப்பத்திற்குரிய காட்சியாக அமைந்தது. படத்தில் வித்யாசாகர் இசையில் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. திரைக்கதை ரசிகர்களால் கொண்டாடப் பட்டது. இந்நிலையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லிங்குசாமி சகோதரர் பதிவு

லிங்குசாமி சகோதரர் பதிவு

தற்போது தி வாரியர் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் லிங்குசாமி எடுத்து வருகிறார். இந்நிலையில் லிங்குசாமியின் சகோதரரும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தியவருமான சுபாஷ் சந்திரபோஸ் வெயிட்டிங் பார் ரன் 2 என்று சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாதவன் நடிப்பாரா?

மாதவன் நடிப்பாரா?

இதையடுத்து ரன் 2 படம் உருவாவது உறுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாதவன் பிசியாக நடித்து வருகிறார். இதேபோல மீரா ஜாஸ்மீனும் மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் இவர்களை வைத்தே படம் எடுக்கப்படுமா அல்லது புதியவர்களை கொண்டு எடுக்கப்படுமா என்றும் பேசப்பட்டு வருகிறது. தி வாரியர் படம் முடிந்தபின்பு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X