24 ஆண்டுகளுக்கு பிறகும் குறையாத வரவேற்பு.. மீண்டும் திரையரங்குக்கு வரும் ரன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: தமிழ் சினிமாவில் காதல், ஆக்‌ஷன், பரபரப்பான திரைக்கதை என ரசிகர்களை கட்டிப்போட்ட வெற்றி படங்களில் ஒன்றான 'ரன்' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் மாதவன் நடித்த இந்த திரைப்படம், வரும் ஜூலை 10-ஆம் தேதி ரீ ரிலீஸாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் என். லிங்குசாமி இயக்கியிருந்தார். ஏ.எம். ரத்னம் தயாரித்த இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். அதோடு, அதுல் குல்கர்ணி, விவேக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்யாசாகரின் இசையில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக, காதல், குடும்ப பாசம், துரத்தல் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் 'ரன்' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், மாதவனின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

Madhavan s Run Returns to Theatres After 24 Years Iconic Tamil Blockbuster Re-Releases on July 10

ரீ ரிலீஸ்: இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, ஜூலை 10-ஆம் தேதி 'ரன்' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுத்துள்ளது.

எதிர்பார்ப்பு: சமீபகாலமாக பழைய வெற்றி படங்கள் ரீ ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், 'ரன்' திரைப்படமும் அதேபோல் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த அறிவிப்பை பகிர்ந்து வரும் ரசிகர்கள், "மீண்டும் பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறோம்", "இது நிச்சயம் தவறவிடக் கூடாத மீள் வெளியீடு" என்று தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X