திடீரென பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்...என்ன காரணம் தெரியுமா ?

டெல்லி : நடிகர் மாதவன் முதல் முறையாக படம் ஒன்றை இயக்கி உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் ஏப்ரல் 1 ம் தேதி மாலை வெளியிடப்பட்டு, பலரின் பாராட்டையும் பெற்றது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் இந்தி பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

நம்பி நாராயணனாக மாதவன்

நம்பி நாராயணனாக மாதவன்

இந்த படத்தில் மாதவன், நம்பி நாராயணன் கேரக்டரிலும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்றை மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமருடன் திடீர் சந்திப்பு

பிரதமருடன் திடீர் சந்திப்பு

அதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நம்பி நாராயணனுடன் சென்று தான் பிரதமர் மோடியை சந்தித்த தகவலை மாதவன் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது ராக்கெட்ரி படத்தின் சில காட்சிகள் பிரதமருக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஃபோட்டோக்களை பகிர்ந்த மாதவன்

அந்த சீன்களை பார்த்த பிறகு, நம்பி நாராயணன் விவகாரத்தில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக மாதவன், தான் பகிர்ந்த ஃபோட்டோக்களுடன் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.

வருத்தம் தெரிவித்த பிரதமர்

வருத்தம் தெரிவித்த பிரதமர்

ராக்கெட்ரி படத்தின் காட்சிகளை பார்த்து விட்டு, தனது கருத்துக்களையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள மாதவன், நம்பி நாராயணனிடம் பிரதமர் தனது வருத்தத்தை தெரிவித்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வாய்ப்பிற்காக பிரதமர் மோடிக்கு, மாதவன் நன்றி தெரிவித்துள்ளார்.

 இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான மாதவன்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான மாதவன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ராக்கெட்ரி படம் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது மாதவன் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் அன்று அனைவரும் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X