மலையாள 'சார்லி'யை இதுல அப்படியே காப்பியடிக்கலை.. அமேசானில் வெளியாகும் 'மாறா' பற்றி மாதவன்!
சென்னை: மாறா படம் மலையாள ரீமேக் என்றாலும் அதை அப்படியே படமாக்கவில்லை என்று மாதவன் கூறியுள்ளார்.
சைலன்ஸ் படத்துக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம், மாறா. ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ளனர்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சார்லி ரீமேக்
மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடிவேணு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக் இது. அமேசான் பிரைமில் வரும் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் திலீப்குமார் இயக்கி உள்ளார்.

ஓவியரை தேடுகிறார்
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாருவின் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) வாழ்க்கையையும், அவர் தன் அபார்ட்மென்ட்டில் ஓவியங்கள் நிறைந்த ஒரு டைரியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் டிரைலர் காட்டியது. அந்த ஓவியங்களால் கவரப்பட்ட பாரு, அந்த ஓவியரை தேடி புறப்படுகிறார். அவர்தான் மாறா (மாதவன்).

நடிக்க முடியுமா
இந்தப் படம் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் படத்துக்குத் திரும்பி இருக்கிறார், மாதவன். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நீண்ட காலத்துக்குப் பின் நான் நடிக்கும் காதல் படம் இது. என்னால் காதல் காட்சிகளில் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது. ஒரு வருடத்துக்கு இரண்டு படங்கள் தான் நடிக்கிறேன்.

ஒவ்வொரு பிரேமும்
ஒரு படத்தின் கதை சரியில்லை என்று என் மனதுக்குப் பட்டால் அதில் நடிக்க மாட்டேன். மோசமான படங்களில் நடிக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். இது மலையாள சார்லியின் ரீமேக் என்றாலும் ஒவ்வொரு பிரேமும் அப்படியே இருக்காது என்று கூறியுள்ளார்.

சிறப்பான நடிப்பு
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் கூறும்போது, இதில் மாதவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் நூறு சதவிகித உழைப்பை கொடுத்திருக்கிறார். இதுவரை நான் நடித்த கேரக்டர்களில் இருந்து இது எனக்கு வேறு மாதிரியான கேரக்டர். ரசித்து நடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











