அஜித் நடிக்க வேண்டிய படத்தை மாதவன் நிராகரித்து இறுதியாக சூர்யா நடித்தார்...எந்த படம் என தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குநர்கள் SJ சூர்யா, AR முருகதாஸ், சிங்கம்புலி என்று பலர் இருக்கின்றனர்.

அதில் முக்கியமானவர் இயக்குநர் AR முருகதாஸ். காரணம் இந்திய அளவில் மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஆமிர் கான், அக்ஷய் குமார் என்று பல முன்னணி நடிகர்களையும் இயக்கியுள்ளார்.

தற்சமயம் H.வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித். அதனை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கவிருக்கிறார். தர்பார் படத்திற்கு பிறகு முருகதாஸ் இன்னும் எந்தப் படத்தையும் அறிவிக்கவில்லை.

மிரட்டல்

மிரட்டல்

தீனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் அடுத்ததாக விஜயகாந்தை வைத்து ரமணா என்கிற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதன் பின்னர் அவர் எடுப்பதாக இருந்த படம்தான் 'மிரட்டல்'. நடிகர் அஜித்தை வைத்து ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியானது. ஆனால் பாலாவின் நான் கடவுள் படத்திற்காக முடி வளர்த்துக் கொண்டிருந்த அஜித்தால் மிரட்டல் படத்திற்காக மொட்டை அடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அந்தப் படத்தில் இருந்து விலகவிட்டதாக கூறப்படுகிறது.

 கஜினி

கஜினி

அந்த மிரட்டல் கதை அதன் பின்னர் பல்வேறு நடிகர்களிடம் சென்றுள்ளது. இறுதியாக கஜினி என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் முருகதாஸிற்கு இந்தி மார்க்கெட்டையும் திறந்துவிட்ட படம் என்றால் அது கஜினி. அந்தப் படம் வெளிவந்த சமயம் 400 கோடி வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.

 ராக்கெட்ரி

ராக்கெட்ரி

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி'. இதில் சூர்யா கௌரவ வேடத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார். இந்தப் படத்தை புரொமோட் செய்யும் வகையில் சமீபத்தில் நடிகர் மாதவன் மற்றும் சூர்யா லைவ் சேட்டில் பேசிய காணொளி பிரபலமானது. அந்த லைவ் சாட்டில் பேசும் பொழுது, கஜினி திரைப்படம் தனக்கு வந்த கதை எனவும் இரண்டாம் பாதி தனக்கு பிடிக்காத காரணத்தினால் முருகதாஸிடம் அதில் சில மாற்றங்கள் செய்து வரும்படி தான் கூறியதாகவும், அதன் பின்னர் சில ஹீரோக்களிடம் சென்று கடைசியாக நீங்கள் நடித்தீர்கள் என்று மாதவன் கூறியிருந்தார்.

 நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

ஆயுத எழுத்து படத்தில் நடித்ததில் இருந்து சூர்யா மற்றும் மாதவன் நல்ல நண்பர்கள். சினிமா துறையில் மாதவனுக்கு இருக்கும் ஒரே ஒரு நெருக்கமான நண்பர் என்றால் அது சூர்யாதானம். கஜினி படத்தில் சூர்யா நடித்தது தனக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றும், அந்தப் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து சூர்யா நடித்தது போல தன்னால் நடித்திருக்க முடியாது என்றும், சூர்யா வாழ்வில் அந்த படம் திருப்புமுனையாக அமைந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் மாதவன் அந்த லைவ் சாட்டில் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X