விஜய்யின் மாஸ்டர் வில்லன்.. விஜய் சேதுபதிக்கு முன் அந்த ஹீரோவைதான் கேட்டாங்களாமே!
சென்னை: விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு முன் பிரபல ஹீரோவிடம் வில்லனாக நடிக்க கேட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது.
விஜய், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

கொரோனா தீவிரம்
இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

பொங்கல் ரிலீஸ்
லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் அதிகாரபூர்வமாக இதன் ரிலீஸ் தேதியை அறிவித்தது.

வில்லனாக மாதவன்
இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு முன், பிரபல ஹீரோ மாதவனிடம் பேசிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இதை மாஸ்டர் படத்தின் திரைக்கதையில் உதவி புரிந்துள்ள இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்து இருக்கிறார்.

வாய்ப்பு இல்லை
நடிகர் மாதவன், சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறேன் என்றும் இந்த நேரத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினாராம். பிறகு, நான் ஈ படத்தில் ஹீரோவாக நடித்துவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நானியும் பரிசீலனையில் இருந்தாராம். அடுத்துதான் நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளனர். அவர் நடிக்க சம்மதித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











