The Rise of GDN: ஜி.டி. நாயுடுவின் எழுச்சி ஆந்தம்.. மாதவன் ஒவ்வொரு ஃபிரேமிலும் சும்மா ஃபயரா இருக்காரே!

சென்னை: வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் மாதவன் இணைந்து தயாரித்துள்ள ஜி.டி. நாயுடு பயோபிக் திரைப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள 'தி ரைஸ் ஆஃப் ஜிடி நாயுடு' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

பைவ் ஸ்டார், திருடா திருடி, திருமலை, ஆரம்பம் என ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த கிருஷ்ணகுமார் ராமகுமார் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் ஒரு கதையை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.

Madhavan s GD Naidu Biopic Movie The Rise of GDN Song Out Now
Photo Credit:

விஷ்ணு விஷால் தயாரிப்பில் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமான ஓஹோ எந்தன் பேபி படத்தை இயக்கினார். அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது மாதவனை வைத்து ஜி.டி. நாயுடு பயோபிக் படத்தை பிரம்மாண்டமாய் இயக்கி உள்ளார்.

ஜி.டி. நாயுடுவின் எழுச்சி ஆந்தம்: 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் இந்த படத்துக்கும் இசையமைத்துள்ளார். ஜி.டி. நாயுடு படத்தில் மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ஜெயராம், வினய், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளி வருகிறது. இந்நிலையில், The Rise of GDN பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

மாதவன் மாஸ் காட்டுறாரு: இந்தியாவின் எடிசன் எனக் கொண்டாடப்பட்ட விஞ்ஞானி ஜி.டி. நாயுடு தனி ராஜ்ஜியத்தையே நடத்தி வந்தார். நேரு, பெரியார், காமராஜர் என பல அரசியல் தலைவர்களுடன் அவர் சந்தித்த காட்சிகள் மற்றும் அவரது கண்டுபிடிப்புகள் என பல விஷயங்கள் அடங்கிய எழுச்சி ஆந்தமாகவே இந்த பாடல் உருவாகி உள்ளது. மாதவன் இந்த படத்தை இணைந்து தயாரித்து நடித்தது மட்டுமின்றி இயக்குநருடன் இணைந்து கதை மற்றும் திரைக்கதையையும் செதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராக்கெட்ரி - நம்பி விளைவு படத்தை மாதவனே இயக்கி நடித்து தேசிய விருதையும் வென்ற நிலையில், அவருக்கு அடுத்த தேசிய விருது காத்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X